Header Ads



"ஒன்லைனில் கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் போதும்" என தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மீது கடும் விமர்சனம்


நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் போதும் என தெரிவித்து, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்கள் தொழில்முறை குறைகளுக்கு தீர்வு காணக் கோரி, முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையின் பின்னணியில் அமைச்சர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் அமைச்சரின் கருத்துக்களை விமர்சித்த பலர், ஆன்லைன் கல்வியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அரசாங்கத்தின் புரிதல் இல்லாததை பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் ஆன்லைன் கல்வி முறைகள் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை அதிக செலவுகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கிடைக்காததால் சிரமங்களுக்குள்ளாக்கியுள்ளன.

இந்நிலையில், ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை, மாணவர்களை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

2 comments:

  1. ஆசிரியர்கள் தற்போது பிள்ளைகளைப்பற்றி யோசிக்க இல்லையே.ஸ்டாலினைப்பற்றி இல்லையா யோசிக்கிறார்கள்.

    ReplyDelete
  2. அமைச்சரின் கருத்து சரியானதே.

    ReplyDelete

Powered by Blogger.