Header Ads



சிறுமி ஹிஷாலினியின் மரணத்தில் ஏன், அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று வருகிறது...?


- Sabarullah Caseem -

கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்னால் அமைச்சர் ரிஷாதின் வீட்டில் வேலை புரிந்து கொண்டிருந்த போது தீப்பற்றி எரிந்து இறந்து போன தனது மகளின் மரணம் பற்றி முறைப்பாடு செய்த பின்னர் இறந்து போன ஹிஷாலினியின் தாயார் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியை பாரத்தேன். 

அந்தப் பேட்டியில் முதலில் நான் உணர்ந்தது அவரது பேட்டி சுத்தமாக இயல்பாக இருக்கவில்லை. அது ஒரு ஸ்க்ரிப்ட் போலவே இருந்தது. அது பற்றி நானிங்கு பேச வரவில்லை. அந்தப் பேட்டியில் அந்தத் தாய் ஒரு விடயத்தை சொன்னார். தனது மகளின் மரண பரிசோதனையை செய்தது ஒரு முஸ்லிம் டொக்டர் என்றும் அதனால் தனது மகளின் மரண பரிசோதனையில் தனக்கு சந்தேகமிருப்பதாகவும். 

அதைக் கேட்க கஷ்டமாகவும் பயங்கரமாகவம் இருந்தது எனக்கு. இப்போதெல்லாம் திரைப்படங்களில் பார்த்து இந்த மாதிரியெல்லாம் நடக்குமா என்று ஆச்சயர்ப்பட்ட அத்தனையும் இந்த தேசத்தில் வெகு இயல்பாக நடந்து கொண்டிருப்பதனை நாம் பாரத்துக் கொண்டிருக்கின்ற பரிதாபத்திலிருக்கின்றோம். முஸ்லிம் டொக்டர் மரண பரிசோதனை செய்ததால் தனக்கு சந்தேகமிருப்பதாக அவர் சொல்லுகின்ற அந்த வார்த்தைகளுக்குள்ளே இருக்கின்ற பேரபாயம் அசுத்தமான அரசயில் சாதாரணமானதல்ல….நாம் அத்தனை பேருமே ஆழமாக யோசிக்க வேண்டியது. 

ஹிஷாலினியின் மரணத்தை வைத்து இங்கே நிறைய ட்ராமாக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றாகதத்தான் இந்த முஸ்லிம் டொக்டர் விடயத்தையும் நான் காணுகின்றேன். இந்தப் பெண்மணியின் கூற்றினை உணர்ச்சி வேகத்தில அப்படியே நம்பி விடுவதற்கு இங்கே நிறைய சனங்களிருக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை. இங்கே தீர்மானமெடுக்கின்ற அத்தனை பேருமே அறிவார்த்தமாக அதனை எடுப்பதனை விட்டு விட்டும் உணர்ச்சி வேக்ததிலேயே அதனை கட்டமைத்துக் கொள்ளுகின்ற கோணங்கித்தனங்கள் நிறைய இருக்கின்றன. 

இந்தப் பெண்ணின் முஸ்லிம் வைத்தியர் சந்தேகத்தையும் பொது சனங்களில் பலர் நம்பி விஷத்தை கக்குவார்கள். இதனை அப்படியே விட்டு விட்டால் எதிர்கலத்தில் முஸ்லிம் வைத்தியர்கள் தமது தொழில் நிமித்தம் தமது நிபுணத்துவம் நிமித்தம் செய்கின்ற மரண பரிசோதனை மட்டுமல்ல எல்லா சோதனைகளினதும் அறிக்கைகளும் சந்தேகத்துக்கு ஆளாகி கேள்விக்குட்படுத்துகின்ற மாபெரும் ஆபத்திருக்கின்றது. 

தேவைக்கேற்றாற் போல அவரவர் இது முஸ்லிம் வைத்தியர் தயார் செய்த அறிக்கை இதனை நமப முடியாதென்று உதார் விடுகின்ற சூழல் உருவாகும்..அதன் பின் மறுபடி பரிசோதனைக்கு உத்தரவு வழங்கப்படும்…நிலைமை உருவாகும். இறுதியில் நினைத்துப் பார்க்கவே முடியாதளவுக்கு நிகழ்வுகளிருக்கும். 

ஹிஷாலினி இறந்து பல நாட்களின் பின்னரேயே ஊடகங்களுக்கு முன்னால் நின்று கொண்டு இறந்த சிறுமியின் தாயார் இந்தக் கருத்துகளை சொல்லியிருக்கின்றார். ஆரம்ப கட்டத்தில் இந்த மாதிரியான விஷக் கருத்துகள் வெளிவரவில்லை. ஆனால் நாளாக நாளாக இந்த மாதிரியான விஷச் செறிவு மிக்க கருத்துகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. 

தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலான நிகழ்வுகள் முன்திட்டமிடப்பட்டவையோ அல்லது பின்னால் தீர்மானிக்கப்பட்டவையோ (Predetermined or afterthought) என்ற சந்தேகத்தை தருகின்றது. 

சிறுமி தீப்பற்றி இறந்திருக்கின்றார். அது கொலையா தற்கொலையா என்று பொலிசார் விசாரணை செய்து அது தொடர்பில் தீர்மானமெடுப்பார்கள். நடந்தது பாலியல் வல்லுறவு மற்றும் கொலையென்றே வைத்துக் கொள்ளுவோம். அவ்வாறெனில் ஒரு பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றம் நடந்தால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமென்பது பொலிசாருக்கும் சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கும் தெரியும். பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை காவல் துறை கைது செய்து அவர்களுக்கெதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்கு பதிவு செய்யும். 

நமது நாட்டில் தினம் தினம் இந்த வகையறா குற்றங்க்ள தொடர்ந்து நடந்து கொண்டுதானே இருக்கின்றன. அத்தனை குறறங்களின் போதும் சம்ப்நதப்பட்டவர்களே சட்டத்தின் முன் கொண்டு வந்து விசாரிப்பார்கள். குற்றவாளிகள் என்றால் தகுந்த தண்டனை வழங்கப்படும். இது இந்த தேசத்தில் தினம் தினம் நடந்து கொண்டுதானிருக்கின்றது. அப்படியிருக்க சிறுமி ஹிஷாலினியின் மரணத்துக்குள்ளே ஏன் அடிக்கடி முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்ற சொல்லாடல் வந்து கொண்டிருக்கின்றது. 

நாட்டில் பலர் தம் நா நுனியில் விஷத்தை கொண்டலைந்து கொண்டிருக்கின்றார்கள். . 

4 comments:

  1. ரிஷாட்டின் குடும்பம் ஒரு முஸ்லிம் குடும்பம் என்று அறிந்து கொண்டுதான் தன் மகளை வேலைக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  2. எல்லாம் கடந்து போகும், எல்லாம் நலவுக்கே என்ற கோட்பாடுகள் மிகவும் வலிமையானது. தமிழர்கள் மத்தியில் அழிவு என்ற துன்பியல் நிகழ்வு நடந்தாலும் அதன் நிமித்தம் வௌிநாடு சென்று கோடிகளைச் சம்பாதித்த ஒரு சமூகப் பிரிவு உண்டாகியதுடன் அதனூடே பல குடும்பங்கள் வருமான மட்டத்தை உயர்த்திக்கொள்ள வில்லையா? இஸ்லாமிய சமூகத்தில் இவ்வாறான நெருக்குதல்கள் வரும் போது கற்றோர் இடம்பெயர்வு என்பது நிர்பந்திக்கப்படும் போது இஸ்லாமிய சமூகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறுமாயின் தர்மம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சமூகத்தில் பயன் பெறுவோர் தொகை ஏனைய சமூகத்தை விட பன்மடங்கு இடம்பெறும். இந்த மாற்றமானது துன்புறுத்த வௌிக்கிட்டவர்களின் எண்ணங்களுக்கு எதிர்மறையாக அமைந்து விடலாம். "எல்லாம் கடந்து போகும், எல்லாம் நலவுக்கே"

    ReplyDelete
  3. எல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொள்வார். மனங் கலங்க வேண்டாம் இஸ்லாமிய சகோதர உறவுகளே

    ReplyDelete

Powered by Blogger.