Header Ads



தேர்தலுக்கு தயாராகுமாறு சஜித், பாராளுமன்றக் குழுவிடம் கோரிக்கை - 3 தீர்மானங்களும் நிறைவேற்றம்


ஐக்கிய மக்கள் சக்தியின் இன்றைய(05) பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்ப்பட்ட தீர்மானம்-எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தோர்தலுக்கு தயாராகுமாறு எதிர்க் கட்சித் தலைவர் பாராளுமன்றக் குழுவிடம் கோரிக்கை.

01.முழு இலங்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களின் வேட்பு மனுக்களுக்களை கோருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.  இன்று (05) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் தயார் செய்யுமாறு பாரளுமன்ற குழுவுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அறிவுறுத்தினார்.

02.ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டி, பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகளை இரத்துச் செய்ய ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அந்த தியாகங்களைச் செய்த அனைவருக்கும் வேட்பு மனுவில் முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் குறித்து பாராளுமன்றக் குழு நீண்ட விடங்களைக் கலந்துரையாடியதோடு இவற்றை 

எதிர்கொண்டு உறுதியுடன் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உள்ளூராட்சி பிரதிநிதிகளைப் பாதுகாப்பதற்கான கட்சியின் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், தொகுதி  அமைப்பாளர்களும், சட்டத்தரணிகள் குழுவும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களுக்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தயாரிப்பதாக முடிவு எட்டப்பட்டது.

03.மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகளின் உயர் கல்வியை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது,இதன் பிரகாரம் முன்னனி பல்கலைக்கழகங்களில்  இருந்து பட்டங்களைப் பெறுவதற்கான ஏற்பாடும் தீர்மானிக்கப்பட்டதோடு,

இதற்கான நிதிகளை கட்சிக் கட்டமைப்பால் வழங்கப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

லக்‌ஷ்மன் கிரியெல்ல 

சிரேஷ்ட சட்டத்தரணி

இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர்.

No comments

Powered by Blogger.