Header Ads



ஜனாதிபதி, பிரதமருடன் 20 ஆதரவாக கை உயர்த்திய முஸ்லீம் Mp க்கள் சந்திப்பு


20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பசில்ராஜபக்சவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் அந்த சந்திப்பில் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பு குறித்து கருத்துவெளியிட்டுள்ள நீதியமைச்சர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என ஆங்கில  ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் முஸ்லீம் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர் எனவும் ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. Thinakkural

2 comments:

  1. இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் இந்த ஆறு கழுதைகளையும் முஸ்லிம் சமூகம் விரட்டிவிரட்டி அடித்துத் துரத்தவேண்டும்.

    ReplyDelete
  2. தமது சமூகம் நெருப்பில் கருகி விடாமல் ஆறுதல் தரும் ஆட்சி வரும் வரை வெயிலில் வேக விடுவது சிறந்த அரசியல் நகர்வே.

    ReplyDelete

Powered by Blogger.