Header Ads



கோட்டாபய ராஜபக்ஷ அவரகளே, இனமத பாகுபாடு இல்லாமல் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் - தலதா Mp


இன்று (29) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலா தெரிவித்த கருத்துக்கள்.

இந்த அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதற்கு பல தலைப்புகள் உள்ளன. நாட்டின் ஜனாதிபதி 69 நிமிடங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பாதுகாப்பற்ற ஒரு நாட்டை தான் அவர் பெறுப்பேற்றார், அதிகாரம் வழங்கப்பட்டது என்றும் அதன் பாதுகாப்பு தற்போது நிறுவப்பட்டது என்றும் கூற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதனை நினைவு கூர்ந்தார்,யுத்தத்தை வைத்து மீண்டும் அரசியல் இலாபம் தேட முயன்றார்.யுத்தத்தை வென்ற எங்களுக்கு கொரோனாவை வெற்றி கொள்வது பெரிய வியமா என்று ஆரம்பத்தில் கூறினார்கள்.தற்போது என்ன என்று கேட்டால், உலக மக்கள்தொகையில் 80 மில்லியன் பேர் கொரோனாவால் நோய்வாய்ப்பட்டுள்ளனர், 3.9 மில்லியன் பேர் இறந்துவிட்டனர் என்று கூறுகிறார். இப்போது அவர் வைரஸ்களை போரை விட ஆபத்தானதாக சித்தரிக்க முயற்சிக்கிறார். உலகின் பிற நாடுகள் வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டது போன்று இப்போது நம் நாட்டுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று கூறுகிறார். இது தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய ஓர் திட்டத்தை ஏலவே எங்கள் கட்சியின் தலைவர்,எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாசா முன்வைத்தார்.ஆரம்பத்தில்  எங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று ஒரு அமைச்சரவை அமைச்சர் கூறினார். இன்று தடுப்பூசி பற்றி பேச வேண்டியது விதியின் பரிதாபமா என்று நாம் கேட்க வேண்டும்.

நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதைப் போல ஜனாதிபதி தேசியப் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார். பாதுகாப்பு பிரச்சினை இல்லையா என்று நாங்கள் கேட்கிறோம். தேசிய பாதுகாப்பு நன்றாக இருந்தால், சமீபத்தில் மகர சிறைச்சாலையில் 11 கைதிகள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள்? காரணம் என்ன அதற்காக என்று வினவுகிறோம்?பொறுப்பானவர்களால் முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதா? சிறைக் கைதிகளும் மனிதர்களே என்று சிறைச்சாலைக்கு முன்னால் பதாகைகள் காண்பிக்கப்பட்டுள்ளன.அவ்வாறு என்று இருந்தால் அவர்களுக்கும் வாழ்வதற்குரிய உரிமை உண்டள்ளவா,இறந்த 11 கைதிகள் சிறைச்சாலை சட்டத்தின்படி அவர்களின் விடயங்கள் கையாளப்படவில்லை.விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

மரனமடைந்தவர்கள் அப்பாவி மக்கள்.வியத்மக மக பாதுகாப்பு அமைச்சர் இதற்கு பெறுப்புக் கூற வேண்டும். இன்று நம் நாடு உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். மாக்காதுரே மதூஷ், ஊரு ஜுவா, கொஸ்கொட தாரக போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் நினைவில் கொள்கிறோம். அவர்களின் நடவடிக்கைகள் பற்றி எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவர்களின் மரணங்கள் குறித்து எங்களிடம் பூரண விடயங்கள் அறிவிக்கப்படவில்லை. இன்று நாடு பாதுகாப்பு இல்லை.

இன்று தெளிவான வெளியுறவுக் கொள்கை எதுவும் இல்லை. அதிகார நாடுகளின் பிரச்சிணைகள் நம் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன, இதனால் பெரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. இது சக்திவாய்ந்த நாடுகளிடையே மையமாக உள்ள ஒரு நாடாக மாறியுள்ளது. இன்று ஜெனீவாவில் நமது நாடு பற்றிப் பேசப்படுகிறது.ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் நமது நாட்டிற்கு தடை ஏற்ப்படுத்தப்படுகிறது.

தெளிவான வெளியுறவுக் கொள்கை பற்றி ஜனாதிபதி தனது உரையில் குறப்பிடவில்லை. ஜனாதிபதி எப்போதுமே நல்லாட்சியைக் குறை கூற முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் இயற்கை பேரழிவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றார்.ஜனாதிபதியைப் பற்றி நாங்கள் வருந்துகிறோம். ஒருவரால் எழுதப்பட்டதைப் படிக்க வேண்டாம் என்று அவரிடம் மீண்டும் கூறுகிறோம். நல்லாட்சியின் காலத்தில் தான் முன்தைய அரசாங்கத்தால் நிரப்பப்பட்ட  மீத்தடமுல்ல குப்பை நிலப்பரப்பு இடிபட்டு விழுந்தது. நாட்டில் 13 மாவட்டங்களில் கடுமையான வரட்சி ஏற்பட்டது.மேல் மாகாணம் வெள்ளத்தால் பேரழிவிற்கு உட்பட்டது. 2017 ல் இரத்னபுர மாவட்டம் உட்பட 12 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 12 மாவட்டங்களும் பேரழிவிற்கு உட்பட்டது. அனர்த்தால் மரணிப்பவர்களுக்கு ஒரு இலட்சம் தான் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.

இவர்களுக்கான நஷ்ட ஈட்டை நல்லாட்சி அரசு 10 இலட்சமாக கொடுத்தது. வீடுகளை இழந்தவர்களுக்கு இடத்துடன் வீடுகள் வழங்கப்பட்டன. வீடுகளை இழந்தவர்களுக்கு வீட்டு உதவி தொகை வழங்கப்பட்டது. இரத்னபுரி மாவட்டத்தில் 26 பேர் இறந்தனர். இறந்த 26 பேருக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் வீதம் வழங்கப்பட்டது. இன்று சரியான தகவல்களை வழங்காது தவறாக ஜனாதிபதி வழிநடத்தப்படுகிறார். நல்லாட்சி காலத்தில் இலங்கையில் இல்லை போல் அவர்.ஜனாதிபதி ஒரு அமெரிக்க குடிமகனாக இருந்ததால் அவருக்கு  2015 லிருந்து இந்த நாட்டில் என்ன நடந்தது என்று அவருக்குத் தெரியாது. அவர் தனிப்பட்ட நன்மைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார். இது அனுத்தையும் விட மிகவும் அழிவுகரமானது. இது போக 52 நாட்கள் சதித்திட்டத்தில் ஏற்ப்பட்ட பெருளாதார வீழ்ச்சியை பணத்தால் கணக்கிடமுடியாது.

தேசத்திற்கு ஜனாதிபதி உரையாற்றும் போது கொரோனாவில் இறந்த மக்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பார் என்று நாங்கள் நினைத்தோம். இறந்தவர்களுக்காக  மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்தோம். முழு கதையிலும் நாங்கள் அது தொடர்பான ஒரு விடயத்தையும் காணவில்லை. கொரோனாவால் இறந்த இந்த மக்களுக்கு இழப்பீடு வழங்க ஒரு திட்டம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம். முந்தைய நல்லாட்சிக்கு அரசாங்கத்திற்கு குறை  சொல்வதைத் தவிர வேறு எதையும் அவல் செய்யவில்லை. முந்தைய சுகாதார அமைச்சரால் செய்யப்பட்ட ஐ.சி.யூ படுக்கைகள் தான் இன்னும் உள்ளன, அதை அதிகரிக்க எந்த திட்டமும் இது வரை முன்வைக்கவில்லை.

20 ஆவது திருத்தத்தின் போர்வையில் மனித உரிமைகள் இழக்கப்படுகின்றன. ஜி.எஸ்.பி சலுகைகள் இழக்கப்படுகின்ற ஓர் நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றம் எங்களைப் பற்றி ஒரு முடிவை எடுக்கிறது. நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளான ஆடைத் தொழில் இன்று முடங்கியுள்ளது.இதனால் பலரின் ஜீவனோபாயம் இல்லாமல் போயுள்ளது. தன்னிச்சையான தனிப்பட்ட முடிவுகளின் காரணமாக பல நாடுகள் எமது நாட்டிற்கு தடைகளை விதிக்க முயற்சிக்கின்றனர்.

இன்று முதல் அலை என்ன இந்த மூன்றாவது அலை என்ன? நான்காவது அலையை உருவாகும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.இது குறித்த திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடமில்லை. காலையில் இறந்தவர்களின் எண்ணிக்கையையும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களையும் அறிவிக்கின்றனர்.படுக்கைகளின் எண்ணிக்கை 10,000 உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது. அது வெற்றியளிக்கவில்லை.பரவலைக்  கட்டுப்படுத்துங்கள். தற்போது அடுத்த செப்டொம்பருக்குள் சகலருக்கும் தடுப்பூசி என்கிறார்கள்.எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் இது குறித்து ஏலவே கூறிய போது அதைப் பற்றி பேசியபோது கேலி செய்யப்பட்டார்.

வரலாற்றில் வேறு எந்த நாட்டுத் தலைவரும் உரையாற்றாத விதமாக மக்களின் வரிப் பணத்துடன் ஒரு மணி நேரமும் ஒன்பது நிமிடங்களும் உரை நிகழ்த்தினார்.ஒன்றரை வருட இயலாமையை கொட்டித் தீத்தது மாத்திரமே. ஒன்றரை வருடங்களுக்குள் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடவே ஜனாதிபதி விரும்பினார்.திரு.

கோட்டாபய ராஜபக்ஷ அவரகளே,இந் நாடு யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல,கொடுமைப்படுத்துபவர் முதல் சுழலும் மனிதன் வரை அனைவரினதும் நாடாகும். வயது, இனம் அல்லது மதம் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் உங்களைக் கோட்டுக்கொள்கிறோம்.

கோவிட் பரவலை கட்டுப்படுத்தல் செய்ய வேண்டிய நேரம் இப்போது கடந்து விட்டது.உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவருவதற்கு முன்னர் அவ்வாறு செய்திருக்க வேண்டும்.இன்று மிகவும் தாமதமாகிவிட்டது, உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவந்து கோவிட் பரிசோதனை செய்து கொண்டிருந்தனர்.

இரட்டை  குடியுரிமையுள்ள ஒருவரை நாட்டின் தலைவராக்க வேண்டாம் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சொன்னோம்.அவரால் தலையை இந்த நாட்டில் வைத்து விட்டு யோசனைகளை வேறு நாட்டில் வைத்துக் கொண்டும் வேலை செய்ய முடியவில்லை.கானிக் உரங்களை பெறுவதற்கு 25 ஆயிரம் ரூபாவை விட அதிக விலைக்கு விற்கப்படுகிறது.இந்த தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயிகளால் முடியாது என்று மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.