Header Ads



வீட்டுக்குள்ளேயே மக்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது - முஜிபூர் Mp


கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசாங்கம் முழுமையாகத் தோல்விக் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாளுக்கு நாள்  நாடு மோசமான நிலைக்குக் சென்று கொண்டிருக்கிறது. நாட்டை கட்டியெழுப்பப் போவதாகக் கூறிக்கொண்டு, ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பாரியளவில் வாக்குகள் கிடைத்தன. அதுபோதாது என பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் கிடைத்தது என்றார்.

அதுவும் போதாதென 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார். இதனூடாக ஜனாதிபதிக்கு அதிகளவான  பலம் கிடைத்துள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்வாரெனவும், நாட்டு மக்களுக்கு சலுகைகளை வழங்குவாரெனவும், நாட்டைக் கட்டியெழுப்புவார் என்கிற எதிர்பார்ப்பிலேயே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு இவற்றை வழங்கினார்கள் எனவும் தெரிவித்தார்.

ஆனால், மக்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக, அரசாங்கம் அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒழிப்புப் பணிகளில் அரசாங்கம் முழுமையாகத் தோல்வி அடைந்துள்ள, வைத்தியசாலைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பரவி உள்ளனர் எனவும் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு சென்றுள்ளன. அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.