Header Ads



நீர்கொழும்பில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின - மக்கள் வீடுகளுக்குள் சிக்குண்டனர்


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு,கோமஸ்வத்த, றப்பர்வத்தை,செல்லகந்த, தெனியவத்த பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் சிக்குண்டுள்ளார்கள்.

நீர்கொழும்பு- கட்டான எல்லையில் அமைந்துள்ள "தெபாஎல" ஓடை பெறுக்கெடுத்ததினால் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஓடைக்கு அண்டிய பிரதேசங்க வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கோமஸ்வத்த, றப்பர்வத்த பிரதேசங்களில் வீதியில் சில இடங்களில் 5அடிக்கு மேல் நீரில் மூழ்கியுள்ளன. இங்கு வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்ததினால் உடமைகள் சேதமடைந்துள்ளன.

வியாழக்கிழமை பெய்த மழை தொடர்ந்து பொழியவே நடுநிசியில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததினால் அங்குள்ளவர்களுக்கு வெளியேவர முடியாத நிலமை ஏற்பட்டன. முடியுமான சிலர் வெள்ளிக்கிழமை காலையில் அங்கிருது வெளியேறினர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார முறைகளைப்பேனியே அவர்களை வெளியேற்றவும், நிவாரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

பெரியமுல்லை பிரதேச சமுக சேவை இயக்கங்களும், நலன் விரும்பி களும் பாதிக்கபட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அயிஷா பதிரனவிடம் வினவியபோது

வெள்ளநீர் வழ இந்த அடைவதற்காக நகர சபை ஊழியர்கள் மூலம் துப்புரவு செய்யும் பனிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வும் ,சமைத்த உதவும் பார்சல்கள் வழங்குவதற்கான வேலைகளை தொட தங்கியுள்ள மிகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.