Header Ads



நீர்கொழும்பில் கொரோனா நிலவரம் எப்படி உள்ளது..?


 - Ismathul Rahuman -

நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவில் 25 பேர் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் மரணமடைந்துள்ளனர். தொற்றாளர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது என நீர்கொழும்பு சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மரணமானவர்கள் நீர்கொழும்பின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளனர். கூடுதலானவர்கள் 45 வயதிற்கு மேற்பட்வர்களும் தொற்றா நோய்க்கு ஆழானவர்களும் ஆவர். மரணமானவர்களில் 6 பேரின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 17 முதல் ஜுன் 13 வரை 834 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் இதுவரை 636 பேர் சுகமடைந்துள்ளதுடன் 198 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

138 குடும்பங்களைச் சேர்ந்த 578 பேர் சுய தணிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் பிரிவின் அடிப்படையில் குரண 104, தலாஹேன- பேருவ 185, கொச்சிக்கடை 155, முன்னக்கரை 76, பெரியமுல்லை 60 என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.