Header Ads



நீர்கொழும்பு அல் ஹிலாலும், விஜயரத்தினமும் தேசியப் பாடசாலைகளாக தரமுயர்வு


- Ismathul Rahuman  -

நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி, விஜயரத்திணம் இந்து மத்திய கல்லூரி என்பன தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்தும் அரசின் திட்டத்திற்கு அமைவாக இப் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்டுள்ளன.

அல் ஹிலால் மத்திய கல்லூரி கடந்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது பாடசாலையை தேசிய பாடசாலையாக தரமுயர்த வேண்டுமென அரசியல் பிரமுகர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இது அதற்கு கிடைத்த வெற்றியென பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது. பாடசாலையின் நீண்டநாள் கணவு நிரைவடைந்துள்ளதாக அல் ஹிலால் அதிபர் எம் எம்.எம். சஹீர், விஜயரத்திணம் அதிபர் என். புவனேஸ்வரராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு கல்வி வலயத்தில் 17 பாடசாலைகள் இவ்வாறு தேசிய பாடசாலைகளாக தரம் உயர்ந்துள்ளன. நீர்கொழும்பு கல்விக் கோட்டத்தில் 8 பாடசாலைகளும், ஜா எல கோட்டத்தில் 5, கட்டான கோட்டத்தில் 4 ஆக 17 பாடசாலைகள். இதில் 1ஏபி தர பாடசாலைகள் 10, 1சி பாடசாலை 7 உள்ளடங்குகின்றன.

இவ்வாறு கம்பஹா மாவட்டத்தில் 70 பாடசாலைகள் தேசிய பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள.

மாகாண சபையின் கீழிருந்த இப்பாடசாலைகள் இத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட இப் பாடசாலைகளுக்கு ஆரம்ப கட்டமாக ஒரு மில்லியன் ரூபா நிதி மத்திய அரசால் ஒதுக்கப்படுகின்றன.

இந்நிதி மூலம் கல்விக்கூடங்களின் அடிப்படைத் தேவைகளான நீர், மின்சாரம், மலசல கூடவசதி, புனர்நிர்மான போன்ற வேலைகளை செய்வதற்கான மதிப்பீட்டறிக்கையை பாடசாலைகள் கல்வி காரியாலயம் ஊடாக அனுப்பிவைக்க வேண்டும்.



No comments

Powered by Blogger.