Header Ads



நாளைய தினம் பின்பற்றவேண்டிய முக்கிய நடைமுறைகள்


சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நாளை (21) பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

மக்கள் அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அலுவலகளுக்கு சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே வரவழைக்க முடியும். 

வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும். 

பொது போக்குவரத்தில், பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். 

ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும். 

தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும். 

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட மாட்டாது. 

அதனபடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே மாகாணங்கள் இடையே பயணிக்க முடியும். 

உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை. 

பொது இடங்களில் கூட்டமாக இருக்க கூடாது.

1 comment:

  1. இரவு 9.30மணிக்கு breaking news ஜூலை மாதம் இரண்டாம்திகதி வ​ரை பயணத்தடை தொடருகின்றது என்ற செய்தியையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.