Header Ads



இலங்கையிலிருந்து சென்றவர் மூலமே தமது நாட்டில், கொரோனா கொத்தணி உருவானதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு


அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை மையப்படுத்தி ஏற்பட்டுள்ள புதிய கொவிட்-19 கொத்தணி, இலங்கையில் இருந்து மீண்டும் அந்த நாட்டுக்கு சென்ற ஒருவரிடமிருந்து பரவியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு தொற்றியிருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

கடந்த மே 8ஆம் திகதி மெல்போர்ன் நகருக்கு சென்ற குறித்த இலங்கையருக்கு அன்றைய தினமே கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது. 

அவர் ஊடாக இரண்டு குடும்பங்களுக்கு வைரஸ் பரவிய நிலையில் மெல்போர்னில் புதிய கொவிட்-19 கொத்தணி உருவானது. இதனையடுத்து மெல்பேர்ன் நகர எல்லைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

40 வயதான குறித்த இலங்கையர் கடந்த மே மாதம் 14 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த விருந்தகத்தில் இருந்து சிகிச்சை வசதிகளுடன் கூடிய விருந்தகம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

பின்னர் கடந்த 23 ஆம் திகதி அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவரிடம் இருந்து விருந்தகத்தில் தங்கியிருந்த மேலும் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று பரவிய விதம் தொடர்பில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.