Header Ads



இலங்கையில் பெண் ஊடகவியலாளர்கள், மீது பாலியல் துன்புறுத்தலா..?


பெண் ஊடகவியலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுப்பது தொடர்பில், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றையதினம் (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

பணிபுரியும் இடங்களில் பெண் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக  பேசப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

இது வரை எனக்கு உத்தியோகபூர்வமாக எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை. முறைப்பாடு கிடைத்தால் உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எம்மிடம் நேரடியாக அது பற்றி அறிவிக்கலாம் என்றார்.

இதன்போது கருத்து வெளியிட்ட மற்றொரு ஊடகவியலாளர், தான் பணியாற்றும் இடத்தில்  பெண் ஊடகவியலாளர் ஒருவர் நோய்வாய்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதித்ததாகவும், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றவை என்றும், குறித்த பெண்ணுக்கு எவ்வாறான சிகிச்சை வழங்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இவை குறித்து கவனம் செலுத்துவதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார். 

No comments

Powered by Blogger.