Header Ads



நீர்கொழும்பில் மீன்களை சமைத்து, சாப்பிட்டு காட்டிய மீனவர்கள்


- நீர்கொழும்பு நிருபர் ஷாஜஹான் -

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளிவரும்  இரசாயனங்களையும் கழிவுகளையும் பொருட்களையும் உட்கொண்டதன் காரணமாக மீன்களை சாப்பிட வேண்டாம் என்று கூறப்படுவது பொய்யாகும். நீர்கொழும்பில் விற்பனை செய்யப்படும் மீன்கள் உண்பதற்கு உகந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் நீர்கொழும்பில்  பிடிக்கப்பட்ட மீன்களை சமைத்து சாப்பிட்டு காட்டுகிறோம் என்று  அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின்   தலைவரும் பிடிப்பினை ஐக்கிய மீனவர் சங்கத்தின் தலைவருமான அருண ரொசாந்த  தெரிவித்தார்.

கப்பலில் இருந்த  அழகுசாதன பொருட்களை மீன்கள் உட்கொண்டிருந்தால்  அந்த மீன்கள் மேலும் அழகாக அல்லவா ஆகியிருக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்

தொடர்ந்து,  பிட்டிபனை மீன் விற்பனை  சாந்தையில் வைத்து நீர்கொழும்பு நகரில் பிடிக்கப்பட்ட மீன்கள் சிலவற்றை ஊடகவியலாளர்களுக்கு காண்பித்து, பின்னர் அதனை வெட்டி சமைத்து  இன்று  மீனவர்கள்  சாப்பிட்டு காட்டினர்.

நீர்கொழும்பு பிட்டிபனை மீன் விற்பனை  நிலையத்தில் விற்கப்படும் மீன்கள் ஆபத்தற்றவை. அந்த மீன்களையே சம்பவம் இடம்பெற்ற அன்று முதல் தொடர்ந்து உட்கொண்டு வருகிறோம். ஆகவே அச்சமின்றி பொதுமக்கள் மீன்களை வாங்கி  உட்கொள்ள வேண்டும் என்று   அருண ரொசாந்த மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.