Header Ads



கூட்டிப் பெருக்கினால் மணித்தியாலத்துக்கு ஒருமுறை 3 குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் வழங்க நடவடிக்கை


உலக சுற்றாடல் தினமான இன்று (05) டெங்கொழிப்பு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு ​பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள சுற்றாடல் அமைச்சு, அச்செயற்பாடுகளை நாளையும் (6) முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

“தற்போது நாட்டில் நிலவுகின்ற கொரோனோ தொற்று பரவல் காரணமாக, சுற்றாடல் தின நிகழ்வுகள் முன்னெடுக்கமுடியாது. எனினும், டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த

அமரவீர தெரிவித்தார்.

தமது வீட்டுச் சூழலை இன்றும் நாளையும் சுத்தப்படுத்தும் முறைமையை வீடியோ செய்து, அமைச்சுக்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களை சுற்றாடல் அமைச்சுக் கேட்டுக்

கொண்டுள்ளது.

இவ்விரண்டு நாள்களில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒருமுறை 3 குடும்பங்களை தெரிவுசெய்து 5,000 ரூபாய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றாடல் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.