Header Ads



3 தினங்களில் 48 ஜனாஸாக்கள் மஜ்மா நகரில் நல்லடக்கம் - 806 ஆக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் உயர்வு


கடந்த 28.60.2021 திங்கட்கிழமை 16 கொரோனா மரணங்களில் 14 முஸ்லிம் ஜனாஸாக்களும் 2 பௌத்த மரணங்களும் அடக்கம் செய்யப்பட்டது. 29.06.2021 செவ்வாய்க்கிழமை 16 கொரோனா மரணங்களில் 15 முஸ்லிம் ஜனாஸாக்களும் 01 கிறிஸ்தவ மரணமும் அடக்கம் செய்யப்பட்டது அதேபோன்று இன்று புதன் கிழமை 30.06.2021 19 முஸ்லிம் ஜனாஸாக்களும் மஜ்மா நகரில் அடக்கம் 

 செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் அசனார் அக்பர் ஜப்னா முஸ்லிம்முக்குத் தெரிவித்தார். 

இதன்படி 806 ஆக முஸ்லிம்களின்  ஜனாஸாக்கள் அதிகரித்துள்ளது. அந்தவகையில் 17 கிறிஸ்தவ மரணங்களும் 16 இந்து மரணங்களும் 09 பௌத்த மரணங்களும் 02  வெளிநாட்டவர்களின் மரணங்கள் என்றவாறு  மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.