Header Ads



2021 இல் நடந்துமுடிந்த பேரித்தம்பழ விநியோகம், குறித்து வெளியாகியுள்ள விபரங்கள்


சவுதி அரசாங்கத்தினால் இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ரமலான் மாதத்திற்கு பேரீத்தம்பழம் வழங்குவது வழமையாக இருந்து வருகின்றது. மேற்படி கிடைக்கப் பெறுகின்ற பேரித்தம் பழங்களை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பது எமது திணைக்களத்தின் ஒரு பணியாகும். எனவே இவற்றிற்காக அரசாங்கம் வருடா வருடம் நிதி ஒதுக்கி வருகின்றது. அந்தவகையில் இவ்வருடம் 22 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழமைக்கு மாறாக இம்முறை சவுதி அரசாங்கம் 75 மெட்ரிக் தொன் பேரித்தம் பழங்களையே வழங்கியுள்ளது. இது இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கு  போதுமானதாக இருக்கவில்லை.எனவே மேற்படி கிடைக்கப்பெற்ற பேரித்தம் பழங்களை விநியோகிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் ஒன்றை  Department of Muslim Religious and Cultural Affairs திணைக்களம் ஏற்பாடு செய்தது. மேற்படி கலந்துரையாடலில் தீர்வாக

1.திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொரு பெட்டி (20 கிலோ கிராம் கொண்ட) பேரீத்தம் பழங்கள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

2.மிகுதி பேரித்தம் பழங்களை வறுமையான மாவட்டங்களை அடையாளம் கண்டு இருக்கும் தொகைக்கேற்ப ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு கிலோ கிராம் வீதம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

3.சவுதி தூதுவராலயம் கேட்டுக்கொண்டதற்கிணங்க 4000 கிலோ கிராம் பேரிச்சம்பழம் தூதராலயத்துக்கு வழங்கப்பட்டது.

வறுமையான மாவட்டங்கள் (புள்ளிவிபர திணைக்களத்தில் இருந்து பெறப்பட்டது)

1.மொனராகலை 2.மாத்தறை  3.ஹம்பாந்தோட்டை  4.முல்லைத்தீவு 5.கிளிநொச்சி 6.புத்தளம்  7.அனுராதபுரம்  8.வவுனியா  9.யாழ்ப்பாணம்  10.பதுளை

மேற்படி தீர்மானத்தின்படி பேரித்தம் பழ விநியோகம் மேற்கொண்டு வரும்போது

கௌரவ வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களுக்கு 26400 கிலோகிராம் பேரீத்தம்பழம் சவுதியில் இருந்து கிடைக்கப் பெறுவதாக தெரிவித்தனர். இவற்றை திணைக்கத்திற்கு அன்பளிப்பு செய்வதாகவும் அவற்றினை வன்னி தேர்தல் மாவட்டங்களான மன்னார் வவுனியா முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு பாகிர்ந்தளிக்குமாறும் வேண்டிக் கொண்டார் . மேற்படி பேரித்தம் பழங்களை திணைக்களத்தின் நிதியில் தீர்வை செய்து திணைக்களத்தின் அதிகாரிகள் மூலம் வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு வினியோகிப்பது என தீர்மானிக்கப்பட்டது.இதற்கான திறைசேரி அனுமதியும் கிடைக்கப் பெற்றது.

அத்துடன் மினுவாங்கொடை மற்றும் அட்டுளுகம பள்ளிவாசல்களுக்கு அவர்களது கிராமங்களுக்கு ஒவ்வொரு கிலோ கிராம் பேரீத்தம்பழம் வழங்கக் கூடிய அளவு பேரீத்தம்பழம் கிடைக்க பெறுவதாக தெரிவித்தனர்.அவர்களும் திணைக்களத்தின் நிதியில் தீர்வை செய்து தருமாறு வேண்டிக் கொண்டனர். மேற்படி கிடைக்கப்பெற்றசுமார் 6000 கிலோகிராம் பேரீத்தம் பழங்கள் திணைக்களத்தின் சுமார் ரூபா 6 லட்சம் செலவில்  செலவு செய்து திணைக்கள அதிகாரிகள் மூலம்

பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் சவுதி அரசாங்கத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற 75மெட்ரிக் டொன்  பேரீத்தம் பழங்கள் முதல்கட்டமாக வறுமையாக அடையாளம் காணப்பட்ட

1.மொனராகலை 3600 K.g.  2.மாத்தறை  8020 K.g.    3.ஹம்பாந்தோட்டை 5500 K.g.  4.கிளிநொச்சி 340 K.g.  

மாவட்டங்களுக்கு ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு ஒரு கிலோ கிராம் வீதம்  வழங்கப்பட்டது.

அத்துடன் அடுத்து அடையாளம் காணப்பட்டு புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்கள் வறுமையான அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களாக இருந்த போதும் அவற்றின் முஸ்லிம் குடும்பங்கள் அதிகமாக காணப்படுவதால் அவற்றுக்கு வழங்குவதற்கு போதுமான தொகை பேரீத்தம் பழங்கள் இல்லாததன் காரணமாக அடுத்த மாவட்டமான யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கும் மிகுதி  தொகை பதுளை  மாவட்டத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம்,

1. யாழ்ப்பாணம் 1360 K.g.

2.பதுளை 6200 K.g.(பதுளை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கு சுமார் 400 கிராம் வீதம் பேரீத்தம்பழம் வழங்கப்பட்டுள்ளது)  வழங்கப்பட்டது .

அத்துடன் எஞ்சிய மாவட்டங்களான கீழ்வரும்

மாவட்டங்களுக்கு பதியப்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஒவ்வொரு பெட்டிகள்(20 K.g.கொண்ட)  வீதம் வழங்கப்பட்டது.

1.கொழும்பு (164*20k.g.)  2.கம்பஹா(97*20K.g)  3.களுத்தறை  (102*20K.g)  4.கண்டி (287*20K.g)  5.மாத்தளை (63*20K.g)  6.நுவரெலியா (40*20K.g)  7.காலி(57*20K.g)  8.மட்டக்களப்பு (157*20K.g)  9.அம்பாறை (267*20K.g)  10.திருகோணமலை (208*20K.g)  11.குருநாகல் (206*20K.g)  12.புத்தளம் (200*20K.g)  13.அனுராதபுரம் (112*20K.g)  14.பொலன்னறுவை (41*20K.g)  15.இரத்தினபுரி (65*20K.g) 16.கேகாலை (111*20K.g)

கிடைக்கப்பெற்ற பேரீத்தம் பழங்களில் 72560 K.g.பேரீத்தம் பழங்கள் விநியோகிக்கப்பட்டன. 

மீதி 2440K.g. பேரீத்தம் பழங்களில்

1.சில பெட்டிகள் பழுதடைந்ததாக காணப்பட்டது.  2. சில பெட்டிகளில் 20 K.g இற்கு  குறைந்து காணப்பட்டன . 3.சில பெட்டிகள் சுங்கத்தீர்வையில் பரிசோதிப்பதற்காக எடுக்கப்பட்டன.

இதுவரை இவற்றுக்காக செலவழிக்கப்பட்ட தொகை 15 மில்லியன்கள் ஆகும்.  இவற்றை விநியோகிப்பதற்காக சதோச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன அவற்றுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. 18.06.2021

2 comments:

  1. இலவசமாகக் கிடைத்த எழுபத்தைந்து மெற்றிக் தொன் பேரீத்தம் பழத்தை நாடு முழுவதும் இலவசமாக விநியோகிக்க அரசாங்கம் இருபத்திஇரண்டு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. அப்படியானால் ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை இலவசமாக விநியோகிக்க முஸ்லிம் திணைக்களத்துக்கு 293.33 ரூபா செலவாகியிருக்கின்றது. இது பொதுமக்களின் பணத்தை வீணாக்கும் ஒரு செயலாகவே தெரிகிறது. அந்த ஒதுக்கப்பட்ட பணம் மூலம் மொத்தமாக பேரீத்தம்பழத்தைக் கொள்வனவு செய்தால் நாட்டில் வாழும் எல்லா முஸ்லிம் குடும்பத்துக்கும் ஒரு கிலோ வீதம் இலவசமாக வழங்கலாம்.ஒவ்வொரு வருடமும் பிச்சையாகக் கிடைக்கும் அந்த பேரீத்தம்பழத்தை எதிர்பார்க்காது பொதுமக்களின் பணத்தைக் கொண்டே அவர்களுக்கு நோன்பு நோற்க ஏற்பாட்டைச் செய்யலாம். அல்லது கஷ்டத்துடன் அதுவும் ஒன்றாகக் கருதி எமக்கு இருக்கும் வசதிகளுடன் அந்த பேரீத்தம்பழத்தையும் வாங்கி மரியாதையாகவும் தலைநிமிர்ந்தும் வாழலாம். இவ்வாறான ஒரு முற்போக்குச் சிந்தனையை முஸ்லிம் கலாசாரத் திணைக்களம் அடுத்த வருடங்களில் சிந்தித்தால் கொஞ்சமாவது இந்த சமூகத்துக்கு மானத்துடன் வாழ அது ஒரு ஆரம்பமாக அமையாதா?

    ReplyDelete

Powered by Blogger.