Header Ads



நீர்கொழும்பில் கொரோனா மரணம் 19, ஜனாஸாக்கள் 4 நல்லடக்கம், தொற்றாளர்கள் 600 - நிமல் லான்சாவின் குடும்பம் தனிமையில்..!

- Ismathul Rahuman -

நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவில், (புதுவருட கொத்தின்) பின்னர், 19 பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாக பிரதான பொது சுகாதார பரிசோதகர் குணரத்ன தெரிவித்தார். 606 பேர் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மரணமானவர்கள் குரண,கட்டுவ,கடற்கரை தெரு, சாந்த ஜோஸப் வீதி, பிடிப்பன, கணல் வீதி, அபேசிங்கபுரம், லாஸரஸ் வீதி, கம்மல்துறை தக்கியா வீதி ஹிரகதவுர வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

நால்வரின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. ஏனையவர்களின் சடலங்கள் நீர்கொழும்பு சேமக்காலையில் தகனம் செய்யப்பட்டன.

நீண்ட காலமாக படுக்கையில் இருந்த நிலையில் வீட்டில் மரணமானவர்களின் உடல்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று அங்கு பீ.சி.ஆர். பரிசோதனை செய்தபோது "பொசிட்டிவ்" ஆன சம்பவங்களும் உள்ளன.

இராஜாங்க ஆமைச்சர் நிமல் லான்ஸா தனது மனைவியும், மகனும் தொற்றுக்குள்ளாகியதினால் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தியுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேச கிராம உத்தியோகத்தர் ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆழாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.