Header Ads



கொரோனா அலையை ஜனாதிபதி முறியடிப்பார் என WHO நம்பிக்கை, அவரது தலைமைத்துவத்திற்கும் பாராட்டு


உலக சுகாதார தாபனத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது,

அடுத்த மூன்று நாட்களில் “சைனோபார்ம்“ தடுப்பூசிக்கு அனுமதி.

உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom)  அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து சூம் (ZOOM) தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பலன் கிட்டியுள்ளது.

கோவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உலக சுகாதார தாபனத்தின் பாராட்டுக்களைத் தெரதிவித்த திரு. டெட்ரோஸ் அவர்கள், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி அவர்களிடம் கூறினார்.

முதல் கோவிட் அலைக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து  தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய தலைமைத்துவத்தை டெட்ரோஸ் அதானோம் அவர்கள் பாராட்டினார். இதன் போது உலக சுகாதார தாபனத்தின் தலைமையில் நடைபெற்ற மாநாடுகளில் இலங்கையின் வெற்றி குறித்து கலந்துரையாடப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இம்முறையும் கோவிட் வைரஸ் பரவுவதை விரைவில் கட்டுப்படுத்த இலங்கை அரசுக்கு முடியும் என்று உலக சுகாதார தாபனம் நம்பிக்கை தெரிவித்தது.

இரண்டாவது கட்டமாக தடுப்பூசி ஏற்றுவதற்கு 20 மில்லியன் “எஸ்ட்ராசெனகா“ தடுப்பூசிகளுக்கான தேவை உலகளவில் உள்ளது. நாட்டில் அதன் தேவை 600,000 தடுப்பூசிகளாகும். அந்த தேவையை பூர்த்தி செய்ய உலக சுகாதார தாபனம் உதவுமென தான் நம்புவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“சைனோபார்ம்“ தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு அடுத்த மூன்று நாட்களுக்குள் உலக சுகாதார தாபனத்தின் அங்கீகாரத்தை வழங்கக் கூடியதாக இருக்கும் என்று திரு. டெட்ரோஸ்  குறிப்பிட்டார். அந்த அனுமதியுடன் நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு “சைனோபார்ம்“ தடுப்பூசியை வழங்க முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார தாபனம் பிராந்திய மட்டத்திலும் அதன் கொழும்பு அலுவலகத்தின் ஊடாகவும் அளித்து வரும் ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.05.07

1 comment:

  1. சனாதிபதி ஊடகப்பிரிவு, உண்மை பேசுவதில் உலக சாதனை!

    ReplyDelete

Powered by Blogger.