Header Ads



வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்கப்படுவதை தடுப்போம்...


 கடந்த 11ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கொழும்­பி­லுள்ள ஜும்ஆப் பள்­ளி­வா­ச­லொன்றில் மூத்த உலமா ஒருவர் ஜும்ஆ பிர­சங்­கத்­தினை மேற்­கொண்­டி­ருந்தார்.


இதன்­போது வக்பு செய்ய வேண்­டி­யதன் முக்­கி­யத்­து­வத்­தினை கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­ய­துடன் வக்பு செய்தால் கிடைக்கும் நன்­மைகள் தொடர்­பாக புனித அல்-­குர்ஆன் மற்றும் ஹதீஸில் குறிப்­பி­டு­கின்ற விட­யங்­களை எல்லாம் சுட்­டிக்­காட்­டினார்.


எனினும், வக்பு சொத்­துக்கள் சூறையா­டப்­ப­டு­வது தொடர்­பிலும் அதற்­காக வழங்­கப்­ப­டு­கின்ற தண்டனைகள் தொடர்பில் எதுவும் குறித்த ஜும்­ஆவில் பேசப்­ப­ட­வில்லை.


ஜும்ஆத் தொழுகை முடி­வ­டைந்த பின்னர் குறித்த மூத்த உல­மா­வினைச் சந்­தித்து இது தொடர்பில் கூறினேன். இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்­ஆவில் நீங்கள் கூறிய விடயம் தொடர்பில் பேசு­கின்றேன் என்று சமாளித்தச் சென்றார்.


குறித்த பள்­ளி­வா­ச­லுக்கு ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு தடவை தான் இந்த மூத்த உலமா ஜும்ஆப் பிர­சங்­கத்­திற்­காக வரு­வது வழமை என ஜமாத்­தார்கள் தெரி­வித்­தனர். அப்­படி என்றால் வக்பு சொத்து சூறை­யா­டப்­ப­டு­வது தொடர்பில் குறித்த உல­மாவின் ஜுஆப் பிர­சங்­கத்­தினை கேட்­ப­தற்கு இன்னும் ஆறு மாதங்கள் காத்­தி­ருக்க வேண்டும்.


கபூ­ரியா அரபுக் கல்­லூ­ரிக்கு வக்பு செய்­யப்­பட்ட பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் ஏற்­க­னவே சூறை­யா­டப்­பட்­டு­விட்­டன. கள்-­எ­ளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்­லூ­ரிக்­காக வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான முயற்­சிகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.


எவ்­வா­றா­யினும், இறை­வனின் உத­வி­யுடன் குறித்த முயற்சி தடுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இது போன்று எமது மூதா­தை­யர்­க­ளினால் நாட­ளா­விய ரீதியில் எதிர்­கால முஸ்லிம் சமூ­கத்­திற்­காக வக்பு செய்­யப்­பட்ட பல கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்கள் தற்­போது சூறை­யா­டப்­படுக் கொண்­டி­ருக்­கின்­றன. காத்தான்குடி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான வக்பு செய்யப்பட்ட காணியை அபிவிருத்தி என்ற போர்வையில் சூறையாட ஒரு தரப்பு முயல்வதாக பாடசாலை சமூகத்தினால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்கள் சூறை­யா­டப்­ப­டு­வது தொடர்­பான விழிப்­பு­ணர்வு மிகவும் அவ­சி­ய­மா­ன­தொன்­றாகும். எனினும், அதனை மேற்­கொள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூ­கங்கள் உள்­ளிட்ட இலங்கை முஸ்லிம் சமூக தவ­றி­விட்­டுள்­ளது.


‘ஜும்ஆ மேடை’ என்­பது சக்தி வாய்ந்த ஊட­க­மொன்­றாகும். இதன் ஊடாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு தேவை­யான விழிப்­பு­ணர்­வு­களை மிகவும் இல­கு­வாக வழங்க முடியும். எனினும், அது வினைத்­தி­ற­னாக இடம்­பெ­று­கின்­றதா என்­பதே இன்று வரை­யுள்ள கேள்­விக்­கு­ரி­யாகும்.


வக்பு சொத்­துக்கள் சூறையா­டப்­ப­டு­வது தொடர்­பி­லான விழிப்­பு­ணர்­வினை ‘ஜும்ஆ மேடையின்’ ஊடாக இல­கு­வாக மேற்­கொள்ள முடியும். அத்­துடன் இந்த சூறையாடல் எனும் பாவத்­திற்­காக இறை­வ­னி­ட­மி­ருந்து கிடைக்­கின்ற தீமைகள் தொடர்பில் எடுத்துக் கூறி அந்தப் பாவத்­தினை தடுக்க வேண்டியதும் உலமாக்களின் கடமையாகும். எனினும், அதனை மேற்­கொள்ள உல­மாக்கள் தவ­றி­விட்­டனர். இதற்­கான சிறந்த உதா­ரணம் தான் கடந்த வாரம் கொழும்பில் இடம்­பெற்ற ஜும்­ஆ­வாகும். ஒரு நன்­மை­யினைக் கூறும் போது அதன் மறு­பக்­க­மான தீமை­யி­னையும் கூற வேண்­டிய சமயத் தலை­­வர்­களின் தலை­யாய கட­மை­யாகும்.


வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்கப்படுவதை தடுக்­கின்ற விட­யத்தில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­யீடு மிகவும் அவ­சி­யாகும். அத்­துடன் இது தொடர்­பி­லான விழிப்­பு­ணர்­வினை மேற்­கொள்­ளு­மாறு உல­மாக்­க­ளுக்கு அறி­வு­றுத்த வேண்­டி­யது அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலை­யாய கட­மை­யாகும்.


இதனை மேற்­கொள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா தவ­ற­விட்­டுள்­ளதை இவ்­வி­டத்தில் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது. இலங்கை முஸ்­லிம்­களின் அனைத்து விட­யங்­க­ளிலும் தலையிடுகின்ற அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­படும் விட­யத்தில் இது­வரை வெளிப்­ப­டை­யாக பேசாத விடயம் கவலையைத் தோற்­று­வித்­துள்­ளது.


அவ்வப் பிரதேசங்களிலுள்ள பண முத­லை­க­ளி­னா­லேயே வக்பு சொத்­துக்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­கின்ற விடயம் யாவரும் அறிந்த உண்­மை­யாகும். இவர்களுக்கு எதி­ராக போரா­டு­வது பண வச­தி­யற்ற அப்­பா­வி­க­ளோ­யாகும். சில வக்பு சொத்து மோசடி வழக்கு விசா­ர­ணை­களின் போது இதனை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.


எனவே, இலங்கை முஸ்லிம் சமூ­கத்­திற்­காக வக்பு செய்­யப்­பட்ட சொத்­துக்­களை பாது­காப்­பது அனைத்து தரப்­பி­ன­ரதும் பொறுப்­பாகும். இதற்­காக வேண்டி அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா உட்­பட அனைத்து முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும் களத்தில் இறங்க வேண்­டி­யுள்­ளது.


அதே­நேரம், ‘ஜும்ஆ மேடையின்’ ஊடாக வக்பு சொத்து கொள்ளையடிப்பிற்கு எதிராக பாரிய விழிப்புணர்வுகளை உடனடியாகவும் அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உலமாக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்க வேண்டும் என இந்தப் பத்தியின் ஊடாக கோரிக்கை விடுக்கிறோம்.


காலங் கடந்துள்ள இந்த விழிப்புணர்வு என்ற விடயத்தினை இப்போதிருந்தாவது நாம் ஆரம்பிப்போம். இதனை செய்யத் தவறின் ஏனைய வக்பு சொத்துக்களும் நிச்சயம் சூறையாடப்படும்!- Vidivelli

No comments

Powered by Blogger.