May 20, 2021

SLMC உயர்பீட கூட்டத்தில் நடந்தது என்ன..? ஹக்கீம் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பார்


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட கூட்டம் நேற்று புதன்கிழமை 19 ஆம் திகதி கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. 

A.L.Thavam

✅️ பைசல் காசிம் எம்.பி தாறுஸ்ஸலாம் கூட்ட மண்டபத்துக்கு ஏற்கனவே வருகை தந்து அமர்ந்திருந்தார். அவருக்கு யாரும் வசைபாடவும் இல்லை திட்டவும் இல்லை.

✅️ எம். எஸ். தௌபீக் எம்.பி வருகை தந்த போது - அவருக்காக கடந்த தேர்தல் காலத்தில் கிண்ணியாவுக்கே சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கொழும்பை சேர்ந்த அவருடைய 02 நண்பர்கள் -  நீங்க எதற்காக 20 க்கு வாக்களித்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கூட்ட மண்டபத்திற்கு வெளியே நடந்த விடயம்.

✅️ வாக்குவாதம் நடைபெறும் போதே தௌபீக் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

✅️ கௌரவ தௌபீக் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் சென்றதும் - அதனை காரணம் காட்டி பைசல் காசிம் எம்.பியும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் சென்றுவிட்டார்.

✅️ மற்ற எம்.பிக்கள் இருவரும், கூட்டத்திற்கோ - தாருஸ்ஸலாமுக்கோ சமூகமளிக்கவேயில்லை.

✅️ கூட்டத்தின் இறுதித் தீர்மானமாக - எம்.பிக்கள் கலந்து கொள்ளாமையினால் , பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற குழுவைக்கூட்டி - தலைவர் இறுதி தீர்மானத்தை அறிவிப்பார் எனவும் - பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

✅️ இந்த சம்பவம் நடைபெறும் போது சபீக் றஜாப்டீன் அவர்களும் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் அவர்களும் - சாப்பாடு வாங்குவதற்காக சென்றிருந்தனர். இந்த பிரச்சினை முடிந்து தௌபீக் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் சென்ற பிறகுதான் - சபீக் ராஜாப்தீன் மற்றும் அஸ்லம் ஹாஜியார் ஆகியோர் தாறுஸ்ஸலாமுக்கே வந்தனர்.

✅ இப்படி இருக்கின்ற போது - இதனை திரிபுபடுத்தி “மட்டக்களப்பான் / கிழக்கான்ன் வெளியிறங்குங்கள்” என்று கூறி போலியாக பிரச்சாரம் செய்வது - port city சட்டத்திற்கு ஆதரவாக #முகா #எம்பிக்கள் #வாக்களிப்பதற்கு #எதிராக #எழும் #விமர்சனத்தை #திசைதிருப்புவதற்காகவே #என்பதை #தெளிவாக #அறியலாம். இந்த வார்த்தைகளைகளூடாக கிழக்கு மக்களை மடையர்களாக்கும் முயற்சியே இது. 

✅ மறுபுறத்தில், உயர்பீடத்தில் இரு எம்.பிக்கள் கலந்துகொள்ளாது ஏலவே தவிர்ந்த இருந்த நிலையில் - கலந்துகொள்ள முயற்சித்தவர்களையும் கலந்துகொள்ளாமல் செய்வதற்கான #ஒரு #சதியா தௌபீக் எம்.பியுடனான இந்த வாக்குவாதம் என்பது பற்றி  - விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என தற்போது கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் அபிப்பிராயம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே 20ம் திருத்ததுக்கு வாக்காளித்து சுகபோகம் அனுபவிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஊடகமும் - நண்பர்களும் - வாக்கெடுப்பில் அந்த பாராளுமன்ற உறுப்பினர் port city க்கு ஆதரவாக வாக்காளிப்பதை - மக்களிடம் இருந்து மறைப்பதற்காக "கிழக்கான் வெளியேறு " என்ற வாசகத்தை வைத்து பிரச்சாரம் செய்கின்றனர் என்பது தெளிவாக விளங்குகிறது.

நீங்கள் என்ன பிரச்சாரம் செய்தாலும் நீங்கள் 20க்கு வாக்களித்து துரோகம் செய்ததை போல் - இப்போதும் port city க்கு அரசுக்கு ஆதரவாக வாக்களித்து நீங்கள் கை நிறைய பெற்றுக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்ய போகிறீர்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். இதற்கான பதில் சொல்லும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

1 கருத்துரைகள்:

20க்கு வாக்களித்ததும் port city க்கு வாக்களிப்பதும் சிறந்த இராஜதந்திரமே. பேரின வாதிகள் தலைகீழாக நின்றாலும் இலங்கையின் தலையெழுத்துக்கள் சிறுபான்மையினரால் எழுதப்படுவது என்பது அவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். Port city ஐ வழங்காவிட்டால் சீனா கடனை மீளப்பெறுவதற்கு முழு நாட்டையும் முடக்கி பிச்சைப் பாத்திரம் ஏந்தும் நிலைக்குத் தள்ளி விடும். கெட்டவர்கள் நட்பு கேடானது.தற்போது தலைக்கு மேலே வெள்ளம் போய் விட்டது அது சாண் போனால் என்ன முழம் போனால் என்ன.

Post a Comment