Header Ads



அரச வைத்தியர்களின் உறவினர்களுக்கு மாத்திரம் கொரோனா தடுப்பூசியா..? - சீறிப் பாய்கிறது PHI


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறவினர்களுக்கு மாத்திரம் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், இதுபோன்ற செயற்பாடுகளுக்கு பொதுசுகாதாரப் பரிசோதர்கள் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பில் கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மேல்மாகாணத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரது உறவினர்கள் ஐவருக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அதன் உறுப்பினர்களின் குடும்ப உறவினர்களுக்கு மாத்திரம் இவ்வாறு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்த சுகாதார அமைச்சின் செயற்பாட்டை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தினருக்கு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு நேற்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகளில், பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் எவரும் கலந்துக்கொள்ளவில்லை எனவும் கூறிய அவர், தடுப்பூசி செலுத்துவததாக இருந்தால் ஒரு சாராருக்கு மாத்திரம் செலுத்தாது, அனைத்தரப்பினருக்கும் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளை முன்னெடுத்து வரும் பொதுசுகாதாரப் பரிசோதர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தற்போது ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். எனவே சுகாதார ஊழியர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமென தான் நம்பிக்கைக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.