May 12, 2021

கலாநிதி அமீர் அலியின் முக்கியமான கட்டுரையும், எனது கருத்தும்

கலாநிதி அமீர் அலிக்கு நன்றி. காலத்தின் தேவையான உங்கள்  முக்கிய கட்டுரை, வாழ்துக்களும்.  

கடந்த பத்தாண்டுகளாக நான் சிங்களவரின் இன்றைய இஸ்லாமிய எதிர்ப்பு  1990 களின் முன்னர் போல பொத்தாம் பொதுவான முஸ்லிம் எதிர்ப்பல்ல இது நடைமுறையிலும் சித்தாந்த ரீதியாகவும் வேறுபட்டது.  அமைப்புரீதியாக மாறுபட்டது என கூறிவந்தேன். சிங்களவர் சூபிகளை பாரம்பரிய முஸ்லிம்கள் அவர்களோடு பிரச்சினை இல்லை என்கிறார்கள். அதேசமயம் தாங்கள்  அரேபிய செல்வாக்கால் உருவான  பாரம்பரியமற்ற முஸ்லிம்களையே  எதிர்ப்பதாக தெளிவாக சொல்கிறார்கள். சொல்கிறார்கள்.  அவர்கள் தெளிவாகவே பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என 1980 பதுகளில்  அரேபிய செல்வாக்குக்கு ஆட்பட்ட  வகாபி, சலாபி சிந்தனை பிரிவினரையே குறிப்பிடுகின்றனர். அவர்களையே  தனிமைப் படுத்தி எதிர்க்கிறார்கள். சிங்கள பெள்த்த இனவாதிகளின் ஈஸ்ட்டர் தாக்குதல் பற்றிய விமர்சனங்களும் இந்த போக்கிலேயே அமைகிறது. 

ஈஸ்ட்டர் தாக்குதலின் முன்னம் நான் பேசிய சிங்கள பத்திரிகையாளர்கள் இன்றைய பகமை அரபு நாடுகளில் சிங்கள பணிபெண்களுக்கு இளைக்கபட்ட கொடுமைகள் மூதூர் காத்தான்குடி பற்றி வீக்கிலீக்ஸ் உட்பட சர்வதேச சஞ்சிகைகளில் வெளிவந்த கட்டுரைகள் ஐ.எஸ் அமைப்பில் இலங்கையர் போராடுவது போன்ற காரணங்கள் இனவாதத்தையும் அச்சத்தையும் வளர்ப்பதாக கூறினார்கள். வீக்கிலிக்ஸ் உட்பட உலக சஞ்சிகைகள் எச்சரித்ததையெல்லாம் தலைவர்களும் அறிஞர்களும் வாசித்ததுகூட இல்லையா. என்கிற அவர்களது கேழ்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கவில்லை. தமிழ் இளைஞர்களின் வரலாற்றை வாழ்ந்து அறிந்தவன் என்கிற வகையில் நான் சொல்லக்கூடியதெல்லாம் விழிப்புடனிருங்கள் எப்பவும் சமூகத்துக்குள் உள்வாரி இணக்கம் தளம்ப விடாதீர்கள். நீங்கள் செயல்பட்டால்மட்டும்தான் இளைஞர்கள்  பதட்டப்படாமல் வாழ்வார்கள் என்பதுதான். 

எனவே தான் நானும் எனது எழுத்துக்களில் பாரம்பரிய முஸ்லிம்கள் ஏனையோர் என்னும் பதங்களை தவிர்த்துவிட்டு பிரச்சினையை புரிந்து கொள்ள்வதோ பிரச்சினையை புரிந்து கொள்வதோ சிங்களவரோடு பயனுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோ சாத்தியமில்லையென  வலியுறுத்தினேன். அதேசமயம் முஸ்லிம்கள் மத்தியில்  வஹாபிகள் தனிமைடபடுகிற ஆபத்து தடுக்கப்படவேணும் எனவும் வலியுறுத்தினேன். 2013 ட்ன் பிற்பகுதியில் நான் சிறையில் இருந்தபோது விவாதங்களின் ஊடாக முஸ்லிம்கள் பற்றிய அவர்களது நிலபாட்டை அறிந்திருந்தேன்.  அதனால்தான் 2014ம் ஆண்டிலிருந்தே   ஜனநாயகரீதியாகப்  சூபிகளும்  வஹாபிகளும்  பேசி ஜனநாயக அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என வலியுறுத்திவந்தேன். தனிமைப் படுதலின் ஆபத்துப்பற்றி இடித்துரைத்தேன்.  அதற்க்குப் பரிசாக முனாபிக் கபீர் பட்டங்களையே வாங்கிக் கட்டினேன். 

முஸ்லிம் அறிஞர்களும்  தலைவர்களும் உள்வாரி எதிர்புகளுக்கு  அஞ்சி வாஹாபிகள் தனிமைப்படும்/தனிமைப் படுத்தப்படும் பூதாகரமான பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.  ஆனால்  சிங்களவரோ தமது  சமகால இஸ்லாமிய எதிர்ப்பு அடிப்படையில்  பாரம்பரியமற்ற முஸ்லிம் எதிர்பே என்பதை தெளிவாக குறிப்பிட்டனர். எனினும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் தம் கண்களையும் காதுகளையும் வாயையும்  மூடிக்கொண்டனர்.  சர்வதேச ஊடகங்களில் போர் காலங்களிலும் பின்னரும் சின்னம்சிறு காத்தான் குடி பற்றி மட்டுமே பலநூறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. முஸ்லிம் அறிஞர்களோ  அரசியல்வாதிகளோ  கண்டு கொள்ளவில்லை. வஹாபிகள் தனிமைப்படும்/ தனிமைபடுத்தப்படும் ஆபத்தான சூழலை   தடுக்க யாருமே  முன்வரவில்லை. சிங்கள ஊடகங்கள் சில தலைவர்கள்  அரபி பெயர் பலகை வைப்பதிலும் ஈச்சமரம் வளர்பதிலும் தீவிரமாக இருப்பதாக உரத்துப் பேசின. நான் ஏற்கனவே தமிழ் அரசியலில் அறிஞர்களும் அரசியல் வாதிகளும் கண்ணை மூடிகொண்டிருந்த அனியாயம்பற்றி சரிநிகரிலும் சமூக வலைத் தளங்களிலும் நிறையவே  விமர்சித்திருக்கிறேன்.   அவற்றுள் பெரும்பாலானவை முஸ்லிம்கள் அவர்கள் நலன்கள் அச்சுறுத்தப்படுகிறது பற்றியதாகும்.  இருந்தும் முஸ்லிம்களின் உள்வாரி பிரச்சினைபற்றி எச்சரித்த போதெல்லாம் நான் மிக மோசமாக கண்டிக்கப்பட்டேன். 

சூபிகளுக்கும் வகாபிகளுக்கும் புத்தி சொல்லி இருந்து பேச வைக்க யாரும் இல்லை.   இது வரலாற்று தவறாகும். இதனால்தான் பிரச்சினை புரிந்துகொள்ளப்படவில்லை.  நீங்கள் அடிபடை பிரச்சினையை தொட்டு எழுதுவது இலங்கை முஸ்லிம் மக்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் தெளிவை ஏற்படுத்துமென நம்புகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே

http://www.vidivelli.lk/article/10694


2 கருத்துரைகள்:

எல்லா குழப்பங்களும் இஸ்ரேல் யூத மற்றும் இந்திய இன் இந்து adipadaiwatha ஊற்று இ‌ன்னு‌ம் ஏனையvarkalin பொறாமை தவிர வேறு ஒன்றும் இல்லை.

சித்தாந்த ரீதியாக பொத்தாம் பொதுவாக பேசுவதுதான் நம்மை சூழ்ந்துள்ள இன்றைய இருளுக்கு காரணம். 1980 களில் இருந்து காத்தான்குடியில் சூபி பள்ளிவாசல் தாக்கபட்ட காலங்களில் பொத்தாம் பொதுவாக பேசாமல் சமரசத்தை ஏற்படுத்திருந்தால் சஹாரான் உருவாகி இருக்க மாட்டான்.பிள்ளைகள் பலர் காப்பாற்றபட்டிருப்பார்கள். நடைமுனை பிரதேச நிலமைகளை புறக்கணித்து வெறும் சித்தாந்ததை முன்வைக்கிறது இளைஞர்களை வழிதவற வைக்கும். தயவு செய்து சூபி வகாபி தரப்புகளிடை ஜனநாயக அடிப்படையிலான சமரசத்தை உருவாக்குங்கள். உங்கள் பிரதேசத்திலும் மாகாணத்திலும் நாட்டிலும் நிலவும் சூழலை ஆராந்து விவாதியுங்கள். இன எதிரிகளும் அரசும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஆராயுங்கள். விமர்சனம் + சுயவிமர்சனம் அடிப்படையில் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விவாதங்களையும் முன்வையுங்கள். நீங்கள் பிரச்சினை என்னவென்று ஆராய்ந்து தீர்க்காமல் எல்லாவற்றுக்கும் ”அயல் சக்திகளே காரணம்” என பொத்தாம் பொதுவாக சித்தாந்தம் பேசுவது இளைஞர்களை வழிதவற வைக்கக்கூடும்.

Post a Comment