Header Ads



உலக சந்தையில் எரிபொருள் விலையின் வேகமான உயர்வு குறித்து, அமைச்சரவை துணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது


 உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இன்று (20) பாராளுமன்ற குழு அறை 08 இல் ஒன்றுகூடிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

மண்ணெண்ணெய் மானியத்தை பூர்த்தி செய்தல், கச்சா எண்ணெய்க்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி (பிஏஎல்) திருத்தம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரச்சினைகள் குறித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் மூன்றாவது விவாதம் இதுவாகும்.

உலக சந்தையில் எரிபொருள் விலை 2019-2020 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில்  2021 இல் இதுவரை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கவனத்தில் கொண்டு தறபோதைய சூழ்நிலைக்கு மத்தியில் மக்கள் நிவாரணத்தைப் பேணுவது குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மின்சார  சபை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இதுவரை 2019ஆம் ஆண்டிற்கான கடன் தொகையையே மீளச் செலுத்தி வருவதாக இதன்போது வெளிப்படுத்தப்பட்டது

கடந்த ஆண்டு நிதி அமைச்சு தலையீடு செய்து எரிபொருள் விலையை உறுதிப்படுத்தியதன் மூலம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ரூ .50 பில்லியன் செலுத்தப்பட்டுள்ள போதிலும், மேலும் 79 பில்லியன் ரூபாய் கடன் தொகை செலுத்தப்பட வேண்டி உள்ளது என்பது தெரியவந்தது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தினசரி இழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

மக்களுக்கு  நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் மின் அலகொன்றை  பாவனையாளர்களுக்கு வழங்குவதற்காக  இலங்கை மின்சார சபை  இதுவரை சுமார் 10 ரூபாய் நட்டத்தை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, டளஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், எரிசக்தி  அமைச்சின செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி, கடற்றொழில்  அமைச்சின் செயலாளர்  ஆர்.எம்.ஐ.ரத்னாயக்க, பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க, இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத், பொது நிறுவனத் துறை பணிப்பாளர் நாயகம் பி.ஏ.எஸ்.அதுல குமார, நிதிக் கொள்கைத் துறை பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க,  கடற்றொழில் நீரியல்வளத்தறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ.ஜே.கஹவத்த, கடற்றொழில் அமைச்சின்  பணிப்பாளர் நாயகம்  (தொழில்நுட்பம்) தம்மிக ரணதுங்க, எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர்  (அபிவிருத்தி) சாமிந்த ஹெட்டிஆராச்சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் புத்திக ருவண் மதிஹேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.