Header Ads



மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போட வேண்டாம் - ஹனீபா மதனி கர்தினாலுக்கு கடிதம்


2014ஆம் ஆண்டு அளுத்­க­மையில் முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யாக அல்­லது நியூ­ஸி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நக­ரத்தில் உள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த முஸ்­லிம்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­ல­டி­யா­கவே ஈஸ்டர் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது என்று கூற முற்­ப­டு­வது மொட்டைத் தலைக்கும் முழங்­கா­லுக்கும் முடிச்சுப் போடு­வ­தா­கவே அமை­கின்­றது என தேசிய ஐக்­கி­யத்­துக்­கான முஸ்லிம் பேர­வையின் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரி­வித்­துள்ளார்.

கொழும்பு மாவட்ட பேராயர் கர்­தினால் மல்கம் ரஞ்­சித்­துக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

ஒரு முஸ்லிம் எந்­தக்­கா­ரணம் கொண்டும் ஒரு கிறிஸ்­த­வ­ரையோ வேதக்­கா­ர­ரையோ இம்­சிக்­கவோ அல்­லது கொலை செய்­யவோ அல்­லது அவர்­களின் ஆல­யங்­களை சேதப்­ப­டுத்­தவோ முடி­யாது. இஸ்­லாத்தில் அதற்கு அனு­ம­தி­யே­யில்லை .

நமது நாட்டில் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், கட்­டு­வாப்­பிட்டி கத்­தோ­லிக்க தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு சியோன் தேவா­லயம் ஆகி­ய­வற்றில் உயிர்த்த ஞாயிறில் தாக்­குதல் நடாத்­தி­ய­வர்கள் முஸ்லிம் பெயர் தாங்­கி­ய­வர்­க­ளாவும், முஸ்­லிம்­களைப் போன்று ஆடை அணிந்­த­வர்­க­ளா­கவும், முகத்தில் தாடி­யுடன் முஸ்­லிம்­களின் கோலம் போட்­ட­வர்­க­ளா­கவும் இருந்­தார்­களே தவிர, அவர்கள் உண்­மை­யான முஸ்­லிம்­க­ளாக இருக்­க­வில்லை. அதனால் தான் அவர்­களின் சட­லங்­களைக் கூட முஸ்லிம் மைய­வா­டி­களில் அடக்கம் செய்ய அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை . எழுந்­த­மா­ன­மாகப் பார்ப்­ப­தற்கு இவர்­களின் நடை, உடை, பாவனை, பேச்­சுக்கள் அனைத்தும் முஸ்­லிம்­களை ஒட்­டி­யது போன்றே தென்­ப­டு­கின்­றது.

இது எவ்­வா­றெனில் மத்­திய கிழக்கு நாடு­களில் தலை­யிலே பெருந்­தலைப் பாகை­க­ளையும், முகத்­திலே பெருந்­தா­டி­க­ளையும் ‘லாயி­லாஹ இல்­லல்லாஹ் முஹம்மத் றசூ­லுல்லாஹ்’ என்று அறபு மொழியில் எழு­தப்­பட்ட பெருங்­கொ­டி­க­ளையும் கையி­லேந்திக் கொண்டு அபூ­பக்கர் அல் பஃதாதி எனும் யூதரின் தலை­மையில் இயங்­கு­கின்ற ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற இயக்­கத்தை ஒத்­த­தாகும்.

முஸ்­லிம்­களைப் போன்று வேடம் தரித்து மத்­திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடு­க­ளையும், அங்கு வாழு­கின்ற முஸ்­லிம்­க­ளையும் சிக்­க­லுக்­குள்­ளாக்கி அவர்­களின் அமை­தி­யான இருப்பை சீர் குலைப்­ப­துடன், முஸ்­லிம்கள் கொடூ­ர­மா­ன­வர்கள் என்று உல­கெங்கும் பறை­சாற்­று­வதே இவர்­களின் நோக்­க­மாகும்.

இந்த அமைப்பு பெரும் பணச்­செ­ல­வுடன் நீண்ட நாட்­க­ளாக திட்­ட­மிட்டுச் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இதன் பின்­பு­லத்தில் இஸ்­ரேலும் இன்னும் பல மேற்­கத்­திய நாடு­களும் காணப்­ப­டு­கின்­றன. ஏகா­தி­பத்­திய ஆதிக்­கத்தை விரி­வாக்கம் செய்­வதே அவர்­களின் முக்­கிய நோக்­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது.

ஈஸ்டர் தாக்­குதல் சம்­பந்­த­மாக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­களை ஆராய்ந்து பார்க்­கின்ற போது இத்­தாக்­கு­தலை மேற்­கொண்ட பாவிகள் புல­னாய்­வுத்­து­றை­யுடன் தொடர்­பு­பட்டு நீ‌ண்ட காலம் பய­ணித்­தி­ருக்­கின்ற உண்­மையை புரிந்து கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இவர்­களைக் கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு இருந்த பல சந்­தர்ப்­பங்­களை வேண்­டு­மென்றே தவற விட்டு வந்­தி­ருக்­கின்­றார்கள். ‘ஈஸ்டர் தாக்­குதல் எனும் நாடகம் நடந்­தேறும் வரை அந்­தப்­பா­வி­களை மூளைச் சல­வை­யுடன் பாது­காத்து போஷித்து வந்­தி­ருக்­கின்­றனர்.

அளுத்­கமை கல­வ­ரங்­களை ஒழுங்­கு­ப­டுத்தி முன்­னின்று நடாத்­தி­ய­வர்கள் ஞான­சார தேரோவும் அவர்தம் கோஷ்­டி­யி­ன­ருமே என்­பதை இந்த நாட்டின் ஊட­கங்கள் அப்­போது மிகத்­தெ­ளி­வாக வெளிச்சம் போட்டு காட்­டி­யி­ருந்­தன . அதற்குப் பதி­லடி கொடுப்­ப­தாக இருந்தால் ஞான­சார தேர­ரையோ அல்­லது அவ­ரது அமைப்பின் பிர­தான காரி­யா­ல­யத்­தையோ தாக்­கி­யி­ருக்க வேண்டும்.

நியூஸி­லாந்து நாட்டின் பிர­தமர் ஜெசிந்தா ஆர்டன் கிரைஸ்ட்சேர்ச் நகரப் பள்­ளி­வா­சல்­களில் நடை­பெற்ற தாக்­கு­த­லுக்கு உட­ன­டி­யா­கவே முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்­புக்­கோ­ரினார். தவி­ரவும், உயி­ரி­ழந்­த­வர்­களின் உற­வி­னர்கள் இது தொடர்­பாக நாங்கள் முழு­மை­யாக மன்­னிப்பு வழங்­கு­கின்றோம் என அப்­போதே அறி­வித்து விட்­டார்கள்.

யதார்த்தம் இவ்­வாறு இருக்கும் போது ‘ஈஸ்டர் தாக்­குதல் நியூ­ஸி­லாந்து கிரிஸ்ட்சேர்ச் நக­ரப்­பள்­ளி­வா­சல்­களில் முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­ட­தற்கு பதி­லடி என்று எவ்­வாறு சொல்­ல­மு­டியும்?

‘ஈஸ்டர் தாக்­குதல் இயக்­கு­னர்­களின் மூளைச்­ச­ல­வை­யி­லேயே இப்­ப­டி­யான பிழை­யான பல விட­யங்கள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதை ஆதா­ர­பூர்­வ­மாக கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் முஸ்லிம் அர­சியல் கட்­சியின் தலைமை ஒன்றின் மீதும் அவரின் சகோ­தரர் மீதும் சந்­தே­கப்­பட்டு குற்­றஞ்­சாட்­டி­யது முஸ்லிம் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு நெடுகிலும் ஜனநாயக வழிமுறையை பின்பற்றிவரும் முஸ்லிம் தலைமைகள் பயங்கரவாதத்துக்கு ஒரு போதும் துணைபோனது கிடையாது. ஆதலால் முஸ்லிம் அரசியல் தலைமை மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் உங்கள் கீர்த்திக்கும் நம்பிக்கைக்கும் களங்கத்தை ஏற்படுத்திவிடும்.

ஆகையால் அரசியல் காரணங்களுக்காகச் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நம்பி, தாங்களும் அக்குற்றச்சாட்டுக்களை சுமத்துவது ஆழ்ந்த கவலையை தருகின்றது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli

5 comments:

  1. Masha Allah. For people who want to truth this article makes many thing clear.

    ReplyDelete
  2. A sensible and well balanced letter which should be carried by the Main Media.

    ReplyDelete

Powered by Blogger.