Header Ads



பொதுஜன முன்னணி கட்சி தலைவர்கள் கூட்டம், அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது


கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இன்று (11) ஒன்றுகூடினர்.

கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள், இதன்போது தலைவர்களது கவனத்திற்கு உட்படுத்தப்பட்டதுடன் எதிர்கால நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு அந்தந்த பிரதேசங்களில் சிகிச்சை மையங்களை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என இதன்போது கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார். 

மேலும், கொவிட் தொற்றுநோயாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்ப்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் இதன்போது கவனம் செலுத்தினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியினால் கொவிட் தொற்றாளர்களுக்காக செயற்படுத்தப்படும் 10 நாட்களில் 10,000 படுக்கைகளை தயார்செய்து சிகிச்சை மையங்களுக்கு கையளிக்கும் திட்டத்தை கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி தலைவர்களினால் பாராட்டப்பட்டது.

எமது மக்கள் கட்சியின் வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர் மற்றும் தேச விமுக்தி ஜனதா கட்சியின் உப தலைவர் கலகம தம்மரங்சி தேரர் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச்செயலாளர் சாகர காரியவசம், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொது செயலாளர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ.சு.க. பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரன, இலங்கை மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன, ஐக்கிய மக்கள் கட்சியின் செயலாளர் டிரான் அலஸ், தேசிய காங்கிரசின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம் அதாவுல்லா, 'யுதுகம' அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டப்ளிவ்.டீ.ஜே.செனவிரத்ன,பவித்ரா வன்னிஆராச்சி, பந்துல குணவர்தன, சி.பி.ரத்நாயக்க, எஸ்.எம்.சந்திரசேன, பிரசன்ன ரணதுங்க, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.