Header Ads



"இந்தியாவை விட இலங்கையில் கொவிட் தொற்றுறுதியாகின்றவர்களின் விகிதம் அதிகம்"


இந்தியாவை விட இலங்கையில் கொவிட் தொற்றுறுதியாகின்றவர்களின் விகிதம் அதிகம் என்று பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Hiru செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது நாளாந்தம் 1500க்கும் அதிகமான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இந்தியாவில் நாளாந்தம் 3 லட்சம் அளவிலானோர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகின்ற போதும், இந்தியாவின் மக்கள் தொகை மற்றும் இலங்கையின் மக்கள் தொகை என்பவற்றை ஒப்பிடும்போது, இலங்கையில் கொவிட் தொற்றுக்கு ஆளாகின்றவர்களின் விகிதம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொவிட் நோயாளர்களுக்கான சிகிச்சையளிப்பதற்கான கட்டில்களுக்கு எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலைகளின் கொள்ளளவைக் காட்டிலும், அதிகளவான எண்ணிக்கையில் கொவிட் நோயாளர்கள் இருக்கின்றனர்.

இது எதிர்காலத்தில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும் என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹிந்த பாலசூரிய எச்சரித்துள்ளார்.

2 comments:

  1. ​பொதுச் சுகாதார அதிகாரிகளான உங்களுக்கு அரசாங்கம் பொது மக்களின் பணத்திலிருந்து வாழ்க்கைக்காக சம்பளம் வழங்குவது பிரச்சினைகளைப் பேசி் பேசி பொதுமக்களை மனச் சஞ்சலங்களில் உற்படுத்தி அவர்களை மனநோயாளர்களாக மாற்றுவதற்கல்ல என்பதை நீங்கள் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.அதற்குப் பதிலாக நாடு எதிர்நோக்கும் சுகாதார நெருக்கடிகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் அதற்கு என்ன புதிய யுக்திகளைக் கையாணடு பொதுமக்களின் நெருக்கடிகளைப் போக்கலாம் என்பதற்கான புதிய புதிய நெறிமுறைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி மக்களைச் சரியாக நெறிப்படுத்தும் பாரிய பொறுப்பைச் சரியாக மேற்கொள்வதற்காகத் தான் உங்களுக்கு பொதுமக்கள் சம்பளம் வழங்குகின்றார்கள் என்பதை எப்போதும் நினைவில் நிறுத்தி செயல்படுமாறு பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.