Header Ads



“ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ, நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும்” – இஸ்ரேல் பிரதமர்


இன்று -17- தொலைக்காட்சியில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு ஹமாஸ் குழுவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை "முழு வலிமையுடன் தொடரும்" என தெரிவித்துள்ளார்.

மோதலை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வரும் சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில் நேதன்யாஹு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"பயங்கரவாததிற்கு எதிரான எங்களின் நடவடிக்கை முழு வலிமையுடன் தொடரும். இஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டு வரும் வரை நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு சிறிது காலம் ஆகும்" என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல் இந்த நடவடிக்கை `நியாயமானது` என்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இஸ்ரவேலை ஒரு கொலைகார நாடு அதனை அடியோடு அழித்து ஒழிக்கும் உலகாயத முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது உலகில் சமாதானத்தை விரும்பும் அத்தனை பேரும் கண்டிப்பாகச் செயல்பட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

    ReplyDelete
  2. இஸ்ரவேலை ஒரு கொலைகார நாடு அதனை அடியோடு அழித்து ஒழிக்கும் உலகாயத முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது உலகில் சமாதானத்தை விரும்பும் அத்தனை பேரும் கண்டிப்பாகச் செயல்பட்டு அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

    ReplyDelete
  3. நீங்கள் தொடர வேண்டுமென்பது தான் அணைத்து முஸ்லிம்களின் எதிர்பார்ப்பும். அப்பொழுது தான் உங்கள் முடிவை நாம் எழுத நாம் உறுதி எடுப்போம்

    ReplyDelete

Powered by Blogger.