Header Ads



தம்பி சாணக்கியனின் வயதும், எனது அரசியல் பொது வாழ்க்கையும் ஒன்று - பிள்ளையான்


- பா.நிரோஸ் -

யுத்தம் நிறைவடையாதிருந்தால், சாணக்கியன் எம்.பி சபைக்கு வந்திருக்க முடியாதெனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கிற சிவநேசதுறை சந்திரகாந்தன், தன்னைக் கீழ்தரமாகப் பழிவாங்குகிற செயற்பாடுகளை சாணக்கியன் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனச் சாடினார்.

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்துரைத்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கைதுகளை, அரசியல் பழிவாங்கல்கள் என தற்போது கூறுகிறார்கள். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், எனக்கு எதிராகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் முதலில் பாய்ந்தது. 68 நாள்கள் சிஐடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எனக்கு, பாயும் படுக்கையும்கூட வழங்கப்படவில்லை” என்றார்.

“அப்போது, எனக்கு எதிராக எவரும் குரல் கொடுக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கடந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்காது, கூட்டமைப்பின் எதிரிகளை அழிக்க, அச்சட்டத்தைக் கூட்டமைப்பு பயன்படுத்தியது.

“என்னைப் புலிகள், சிங்கங்கள், பறவைகளென கூறிய தம்பி சாணக்கியனின் வயதும் எனது அரசியல் பொதுவாழ்க்கையும் ஒன்று. வன்முறையைக் கைவிட்டு, புலிகளிடமிருந்து பிரிந்து வந்தது உலகறியும்” என்று, அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. இவருக்கு யார் வழிகாட்டி என்பதை இவர் மறந்து விட்டு பெரியாள் பத்துறார்.

    ReplyDelete

Powered by Blogger.