Header Ads



வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன, கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குங்குள் - இலங்கை மருத்துவ சங்கம்


வைத்தியசாலைகள் நோயாளர்களினால் நிரம்புவதால் அத்தியவசிய பயணங்களை மாத்திரம் முன்னெடுத்து, பயணக் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள் வருமாறு:

🛑 நோயாளர்களுக்கான கட்டில்கள், இட வசதி ஆகியன பாரியளவில் குறைந்து செல்கின்றன

🛑 அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பியுள்ளன

🛑 வைரஸின் புதிய திரிபில் பரவும் வேகம் அதிகமாகவுள்ளது

🛑 தற்போது குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டவுடன் பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மற்றையவர்களுக்கும் தொற்று ஏற்படக்கூடும்

🛑 நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தற்போது சிரமமுள்ளதால் வீடுகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது

🛑 அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நோயாளர்களை தனிமைப்படுத்தி, வீட்டினுள் முகக்கவசத்தை அணிந்துகொள்வதை கட்டாயமாக்க வேண்டும்

🛑 வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ள நோயாளர்களுக்கு தேவையான பரசிட்டமோல் போன்ற ஆரம்ப சிகிச்சையை அளிக்க வேண்டும்

No comments

Powered by Blogger.