Header Ads



மக்கள் தமது வீடுகளில் இருக்க, அமைதியாக கழிந்த நோன்புப் பெருநாள் (வீடியோ)


- பாறுக் ஷிஹான் -

நாட்டில் கொவிட் 19 தொற்று பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணி தொடக்கம் திங்கள் கிழமை அதிகாலை 4.00 மணி வரை அரசாங்கத்தினால் பயணத் தடை மற்றும் பொது மக்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய அம்பாரை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகர அனைத்து பிரதேசங்களிலும் பொது மக்களின் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதேவேளை வர்த்தக நிலையங்கள் , பஸ் நிலையம்,சந்தை என்பன மூடப்பட்டு கிடப்பதனை அவதானிக்ககூடியதாகவுள்ளது.

முஸ்லிம்களின் நோன்பு பெருநாளாக இத்தினங்கள் இருந்த போதிலும் அப்பிரதேசங்களும் எந்த விதமான கழியாட்டங்களுமின்றி மக்கள் தத்தமது வீடுகளிலேயே இருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.

அம்பாரை மாவட்டத்தில் பொலிஸாரும், இராணுவத்தினரும் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


2 comments:

  1. These true citizens...sacrificed their freedom to save the country and its people.

    They did by "Action" but the poisonous media miss the chance to blame the Muslims this time....

    ReplyDelete
  2. கடைசியாக நம்மல குறை சொல்ல வருவான் suhunan.

    ReplyDelete

Powered by Blogger.