Header Ads



பவித்திரா - சாணக்கியன் பாராளுமன்றத்தில் வாய் தர்க்கம் (வீடியோ)


இன்றைய தினம் -18- பாராளுமன்ற கேள்வி நேரத்தின் போது. கிழக்கு மாகாணத்தில் 1000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 500 இற்குள்ளேயே பெறுபேறுகள் கூறப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 2200 கொரோனா நோயாளிகள் உள்ளார்கள். 52 பேர் உயிரிழந்துள்ளார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒட்சிசன் வழங்குவதற்கான வசதிகள் இல்லை. Ambulance வாகனத்திற்கு 194 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஏன் நீங்கள் வேற்றுமை காட்டுகின்றீர்கள்?

அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர்.

இன்று அரசாங்கத்தினால் Covid19 இற்கு தேவையான நிதி வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் PCR பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுள்ளோம். பரிசோதனைக் கூடங்களை அதிகரிக்கவும், 24 மணித்தியாலங்கள் வரை சேவையில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம். கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதானால் நாங்கள் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றோம். 

அதன் பின்னர் நான் கூறினேன் பிரதமர் கூறிய வார்த்தையை கூட நீங்கள் கேட்கவில்லை. Cath lab என்று கூறியவுடன் என்னை இனவாதி என்றார். பிரதமருக்கு வழங்கிய அறிக்கையினை கூட நீங்கள் நிறைவேற்றவில்லை. இனவாதத்தை நான் அல்ல நீங்கள் தான் தூண்டுகின்றீர்கள் என்று கூறி எனது உரையை முடித்தேன்...



No comments

Powered by Blogger.