Header Ads



7 நாட்களில் 3,000 ராக்கெட்டுகளை ஹமாஸ், ஏவித் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது - நேற்றைய நாளே மிகவும் கொடூரமானது என்கிறது பலஸ்தீன்


கடந்த மே 10ஆம் தேதி இஸ்ரேலுடனான மோதல் தொடங்கியதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைதான் "மிகவும் கொடூரமான" நாளாக அமைந்தது என்று காசாவில் உள்ள பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 16 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் இதுவரை தங்கள் தரப்பில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

காசாவில் இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 55 குழந்தைகள் மற்றும் 33 பெண்களும் அடக்கம் என்று கூறுகிறது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீன சுகாதார அமைச்சகம்.

பாலத்தீனர்கள் 1,230 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களில் தீவிரவாதிகளும் அடக்கம் என்று கூறுகிறது இஸ்ரேல்.

கடந்த ஒரு வார காலத்தில் காசா பகுதியில் இருந்து பாலத்தீன ஆயுதக் குழுவினர் தங்கள் பகுதியை நோக்கி 3,000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவித் தாக்கியுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவற்றில் பெரும்பாலானவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன. BBC

No comments

Powered by Blogger.