May 20, 2021

போர்ட் சிட்டி சட்டமூலம் நிறை​வேறியது - ஆதரவாக 148 வாக்குகளும், எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலமானது, இன்று பாராளுமன்றத்தில்  89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 148  வாக்குகளும் எதிராக 59  வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இச்சட்டமூலம் தொடர்பான வாதவிவாதங்கள் நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment