Header Ads



இன்று தனிமைப்படுத்தல் செய்யப்பட்ட 13 கிராம பிரிவுகளின் விபரம்


நாட்டில் மேலும் 13 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, 

கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு கிராம சேவகர் பிரிவுகள். 

கம்பஹா மாவட்டத்தின் மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலபிட்டிவல நவ மஹர கிராமம் மற்றும் மகுல் பொகுன கிராமத்தின் மகுல் பொகுன வீதி கிராம சேவகர் பிரிவுகள். 

காலி மாவட்டத்தின் இமதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர கிராம சேவகர் பிரிவு மற்றும் அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டானிகத கிராம ​சேவகர் பிரிவு 

இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சன்னஸ்கம, தொட்டகஸ்வின்ன மற்றும் கொடகம கிராம சேவகர் பிரிவுகள். 

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ நகர் கிராம சேவகர் பிரிவு. 

கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடபொத்த மற்றும் கெந்தாவ கிராம சேவகர் பிரிவுகள். 

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இதேவேளை கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுஅக்கல மற்றும் பொல்ஹேன கிராம சேவகர் பிரிவுகளுக்கு மற்றும் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.