Header Ads



சஹ்ரான் ஏன் தேவாலயத்தில் தன்னை வெடிக்கவைக்கவில்லை, முஸ்லிம்ளையும் ஏன் கொலைசெய்தார் என்பதையும் ஆராய வேண்டும் - மல்கம் ரஞ்சித்


அரசியல் நிலைப்பாடுகளும் கூட்டணிகளை பாதுகாக்க வேண்டிய தேவையும் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான வெளிப்படையான விசாரணைகளிற்கு தடையாகவுள்ளன என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவுகூறும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடகாலமாகியுள்ள போதிலும் அதிகாரிகள் இன்னமும் உண்மையைகண்டுபிடிக்கவில்லைஎன அவர் குறிப்பிட்டுள்ளார்.

யார் ஏன் செய்தார்கள் என்ற கேள்விகளிற்கு இரண்டு வருடங்களிற்கு பின்னரும் அதிகாரிகள்  பதிலை கண்டுபிடிக்காதது ஆச்சரியமளிக்கின்றது என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போது அக்கறையின்மையே காணப்படுகின்றது என்பதை நாங்கள் வலியுறுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அனைத்து விடயங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் விசாரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சில விசாரணைகள் அரசியல் காரணங்களால் முடங்கியுள்ளன எனவும் தெரிவித்துள்ள கர்தினால் இந்த கேள்விகளிற்கு பதில் கிடைப்பது தேசத்திற்கு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க சமூகம் தொடர்ந்தும் நீதி உண்மை மற்றும் வெளிப்படத்தன்மைக்காக போராடும் என அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற சம்பவங்களும்,இந்த சம்பவங்களில் கொல்லப்பட்ட 269 பேரும் இலங்கை சமூகத்தை அழித்துக்கொண்டிருக்கின்ற நோயினை வெளிப்படுத்துகின்றன இனங்களுக்கும் மதங்களிற்கும் இடையிலான நம்பிக்கையின்மை என்ற நோய் அது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஒன்றுபடவேண்டியதன் அவசியம் மிக தெளிவாக வெளிப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் ஒரு சமூகத்தை மாத்திரம் இலக்குவைக்கவில்லை பல மதங்கள் இனங்களை சேர்ந்தவர்களிற்கு மரணத்தை ஏற்படுத்த அவர்கள் தீர்மானி;த்தனர் எனவும் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஜஹ்ரான் ஹாசிம் ஏன் தேவாலயத்தில் தன்னை  வெடிக்கவைக்காமல் ஹோட்டலில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்தார் அதன் மூலம் கத்தோலிக்கர்கள் கிறிஸ்தவர்களை மாத்திரம் கொலை செய்யாமல் ஏன், முஸ்லீம்கள் மலாய இனத்தவர்களையும் கொலை செய்தார்  என்பதை நாங்கள் ஆராயவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உண்மையான கிறிஸ்தவ உணர்வின் அடிப்படையில் தாக்குதலின் பின்னர் தேவாலயங்களும் கத்தோலிக்க சமூகத்தினரும் மேலதிக வன்முறைகளை தவிர்த்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் முஸ்லீம் சமூகத்தினரை இலக்குவைத்து இடம்பெற்றிருக்க கூடிய தாக்குதல்களை தவிர்த்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் இடம்பெற்று சில நாட்களின் பின்னர் முஸ்லீம்களையும் சிங்களவர்களையும் மோதவிடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் நாங்கள் தலையிட்டு அதனை தடுத்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். Thinakkural

1 comment:

  1. Whoever has different opinion about Cardinal Malcom Ranjith Sir, I have firm good opinion about him. He did a very good part for the country and all the communities, although he is being a patron of the Christianity. Really, he is great.

    ReplyDelete

Powered by Blogger.