Header Ads



கொழும்பு துறைமுகம் சீன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்காது – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

 
கொழும்பு துறைமுகம் சீன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்காது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரின் சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை பொலிஸாரிடமே காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் சீன காலணி எனவும் சீன பொலிஸாரினால் நிர்வாகம் செய்யப்படும் எனவும் கூறப்படுவதில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கும் இலங்கையின் சட்ட திட்டங்களே அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இணைய வழியாக இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. மணியோசை வரும் முன்னாள் பின்னால்தான் தான் யானைவரும்

    ReplyDelete
  2. மணியோசைவரும் முதல் யானைவரும் பின்னாடி

    ReplyDelete

Powered by Blogger.