Header Ads



கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணப் பணி ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீதியில் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது. 

இந்தப் பாலம் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபைகளையும் இணைக்கும். இதன் நீளம் 120 மீட்டர் ஆகும். இதற்காக ரூ 75 கோடி செலவிடப்படவுள்ளது.. மூன்று கட்டங்களில் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெறவுள்ளன.. 

குறிஞ்சாக்கேணி மற்றும் கிண்ணியாவுக்கிடையில் பொது மக்களுக்கான போக்குவரத்து தற்போது படகு மூலமே இடம்பெறுகிறது. 

இந்த பால கட்டுமானப் பணிகளின் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போக்குவரத்து வசதியை பெறுகின்றனர். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

No comments

Powered by Blogger.