Header Ads



"நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க, அவங்க அல்லாஹ்வை வணங்குறவங்க"


நடிகர் சசிக்குமார் அவர்களின் ஒரு பதிவு.

இஸ்லாமியர்களை மிகச்சரியாக புரிந்து கொண்டவர்கள் தமிழக இந்துக்களே....

1 கறி சாப்பிடுங்க....பாய் கடையில் தான் வாங்கினோம்....

2 முஸ்லீம் புள்ளைங்க வருது வழி விட்டு நில்லுங்க என இடம் கொடுக்கும் இளைஞர்கள்...

3 தீபாவளி படையல்களை சாமி கும்பிடுவதற்கு முன்னே கொடுத்து அனுப்பி நட்பு பாராட்டும் சமூகம்...

4 நோன்புக்கு நாங்க ஏதாவது செஞ்சி தரலாமா என கேட்கும் அக்கம் பக்கம்...

5 பிள்ளைக்கு முடியல கொஞ்சம் ஓதி பாருங்க என பள்ளிவாசலில் நிற்கும் சகோதரத்துவம்...

6 பாங்கு சொல்லியும் தொழ போகாம நிக்கிற கிளம்புடா என அதட்டும் ரூம்மெட்...

7 பார்க்காம இருந்துருப்பான்...அதை தவிர வேற எந்த காரணமும் இருக்காது அவன் கல்யாணத்திற்கு கூப்பிடாம இருக்கிறதுக்கு..பிரியாணி சாப்பிட கிளம்பு என புரிந்துகொள்ளும் தொப்புள் கொடி உறவு...

8 நிச்சயமா அவங்க ஏமாத்தா மாட்டாங்க அவங்க அல்லாஹ்வை வணக்குறவங்க என நம்பிக்கை பாராட்டும் சமூகம்...

9 ஒரு முஸ்லிம அடிக்கிறத வேடிக்கை பார்க்க முடியாது என தட்டிக்கேட்க கிளம்பு என உறவு முறை தேடும் சொந்தம்....

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

இந்து வேறு

இந்துத்துவா வேறு.....

12 comments:

  1. மத நல்லிணக்கமும் சமூக நீதியும் வளர்ந்துவரும் தமிழ்நாட்டில் வாழுவதற்க்கு கொடுத்து வைத்திருக்கவேணும்.இன்றுவரை இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ நான் கறிவாங்கும்போதெல்லாம் முஸ்லிம்கடையை தேடித்தான் நம்பிக்கையுடன் கறி வாங்குகிறேன். இந்த நம்பிக்கை ஒரு புறோக்கிறாம் போல தமிழர் ரத்தத்தில் உள்ளதுதான். நோன்பு திருநாள் நல்வாழ்த்துக்கள். - ஜெயபாலன்

    ReplyDelete
  2. ஜெயபாலன் ஐயா அவர்களே!
    ஓட்டமாவாடியில் இரண்டு முஸ்லிம் சமையற்காரர்கள் கொலைசெய்யப்பட்டு, எரிக்கப்பட்டு, அடக்கம் செய்யும் உரிமை கூட மறுக்கப்பட்ட போது நீங்கள் எழுதிய அனுதாபக் கவிதை இன்னும் எமது நினைவில் நிழலாடுகிறது.இன உறவுக்கும் நல்லிணக்கத்திற்குமான உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  3. உங்கள் கருத்துக்கு நன்றி ஜெயபாலன் ஐயா."trust the person who trust the God" இறைவனை முற்றாக நம்புபவனை நம்பலாம் என்று ஆங்கிலத்தில் ஒரு மொழி வழக்கு உண்டு. உண்மையான இறை நம்பிக்கை உள்ளவன் எவருக்கும் துரோகம் செய்யமாட்டான்.நியாஸ் இப்றாகிம்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அண்ணா. இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வு க்கு...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  7. நன்றி நண்பர்களே.

    ReplyDelete
  8. ஐயாவுக்கு நன்றி.
    உலகில் மனித குலம் ஒன்றே அதற்குள் ஏன் வேறுபாடு இதனைப் புரிந்து கொண்டால் போதும்.

    ReplyDelete
  9. ஐயாவுக்கு நன்றி.
    உலகில் மனித குலம் ஒன்றே அதற்குள் ஏன் வேறுபாடு இதனைப் புரிந்து கொண்டால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.