Header Ads



ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை, விஜயதாச தவறாக புரிந்து கொண்டு விட்டார் - அமைச்சர் மகிந்தானந்த


நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ச கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து கரிசனை வெளியிட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க விவகாரங்கள் தொடர்பில் கரிசனைகள் காணப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி தொடர்புகொள்வது வழமை என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா குமாரதுங்க மகிந்தராஜபக்ச ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன் அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் எழுந்தால் அவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

விடயத்தை தெளிவுபடுத்துவதற்காக  ஜனாதிபதி  நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவை தொடர்புகொண்டார் என தெரிவித்துள்ள அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் நிலைமையை தணிப்பதற்கு முயன்றார் தவறாக புரிந்துகொண்டுவிட்டதாக தெரிவித்தார், ராஜபக்ச குடும்பத்தை விமர்சிக்கவில்லை என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் ஊடகங்களில் பிரதான செய்தியாக மாறியுள்ளது கவலையளிக்கின்றது அரசியல் நோக்கங்கள் கொண்ட ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் திட்டங்களை குழப்ப முயல்கின்றன எனவும் தெரிவித்துள்ளார். Thinakkural

No comments

Powered by Blogger.