Header Ads



சவுதிக்கான புதிய இலங்கைத் தூதுவராக பீ.எம்.அம்ஸா - பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கிகாரம் வழங்கியது


உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் 5  அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற, உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

சவுதி அரேபியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பீ.எம்.அம்ஸாவை நியமிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அங்கிகாரம் வழங்கியது.

No comments

Powered by Blogger.