April 28, 2021

ஈஸ்டர் தாக்குதலை தமது அதிகார இருப்பை, பாதுகாக்க பயன்படுத்துவது துரதிஷ்டமாகும் - பென்சேகா


இன்று(28) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா தெரிவித்த கருத்துக்கள்.

இன்று நாட்டு மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்திற்காக பல சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.நாளாந்த நுகர்வுத் தேவைகளுக்கு ஏற்றால் போல் நாளாந்த வருமானங்கள் இல்லாமையும் அத்தியவசியப் பொருட்களின் கட்டுப்பாடற்ற விலை என்பவற்றால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கிய வன்னமுள்ளனர்.குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை.

சீனி மேசடியை ஏற்படுத்தியவர்களே தேங்காய் என்னெய் மேசடியையும் ஏற்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாக புரிகிறது.இதையும் தாண்டி மக்களை சூட்சுமமாக ஏமாற்றும் புதிய மேசடியிலும் ஈடுபட்டிள்ளது. அன்மையில் ஏற்ப்படுத்தப்பட்ட கேஸ் விலைக் குறைப்பு பாரிய ஏமாற்றும் வித்தையாகும். கேஸ் 12.5 கிலோ எடை கொண்ட கொள்ளளவிலிருந்து 3 கிலோ எடையைக் குறைத்து விட்டு 100 ரூபா விலைக் குறைப்பாக காட்டியுள்ளனர்.உன்மையில் எடை குறைப்பால் 400/500 ரூபாவை மக்கள் மேலதிகமாக செலுத்துகின்றனர்.அரசாங்கத்தோடு இருக்கும் சில வியாபார நண்பர்கள் குழுவே இவ்வாறான மேசடிகளில் ஈடுபட்டுள்ளன.

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் நாட்டின் நலனிற்கு பாதிப்பாக அமைந்துள்ளது.புதிதாக இணைக்கப்பட்ட பூமிப் பரப்பை தனி சீனாவின் ஆதிக்கத்திற்குட்பட்ட பிரதேசமாக மாற்றும் இந்த ஆணைக்குழுச் சட்டம் என்பதாலயே இதை எதிர்க்கிறோம். இலங்கையின் முன்னேற்றத்திற்கு கொழும்புத் துறைமுக நகரம் மிக முக்கிய மூலோபாய இடமாகும்.எனவே இதை சீனாவின் ஆதிக்கத்திற்கு சீனாவின் தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்ட வெளிப்படை தன்மையற்ற பொறுப்புக் கூறாத சட்ட மூலத்தை எதிர்க்கிறோம்.கொழும்பு மாநகர சட்டம்,நகர அபிவிருத்தி அதிகார சட்டம்,பாராளுமன்ற கணக்காய்விற்குட்படாத தன்மை,பொறுப்புக் கூறாத தன்மை என்பவற்றால் இதில் பாரிய சிக்கல் தன்மையுள்ளது.மக்கள் எதிர் பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக அரசாங்கம் செயற்பட வேண்டும். இவ்வாறு துறை முக நகர திட்டம் முன்னெடுக்கப்படுமாகா இருந்தால் இதன் மூலமான வர்த்தக பொருளாதார நலனும் பிராந்திய நலனும் வெளிச் சக்திகளுக்கே செல்லும் எனச் சுட்டிக் காட்டினார்.

கொரோனா மூன்றாம் அலை ஏற்ப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் முகாமை செய்ய முடியாமையின் விளைவுகளை படிப்பினையாகக் கொண்டு இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும்.கோவிட் பரவல் மற்றும் சிகிச்சையளிப்பு முகாமை விடயங்களில் சுகாதாரத் துறை பலவீனப்டட்டுள்ளதாக சுகாதார நிர்வாக அதிகாரிகளே கூறுகின் றனர்.அரசாங்கம் தான் கைவிட்டுள்ளது.தடுப்பூசிளை கொள்வனவு செய்வதற்கு இவ்வளவு காலமும் நிதி ஒதுக்காது தற்போது தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்று ஜனாதிபதி கூறுகிறார்.தான் கடந்த ஆண்டே தடுப்பூசி கொள்வனவு பற்றி பாராளுமன்த்தில் குறிப்பிட்டேன்.குறிப்பிட்ட போது வாசுதேவும் நாமலும் கின்டளடித்தனர். இன்று அவை உன்மையாககியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரகளை கண்டுபிடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்த நிலையும் கண்டுபிடிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது.பலவீனமான ஆட்சியாக அமைகிறது.ஈஸ்டர் தாக்குதலை வைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போதும் தமது அதிகார இருப்பை பாதுகாக்க இதை பயன்படுத்துவது துரதிஷ்டமாகும்.இதில் அரசியல் இலாபங்கள் தோடாமல் உன்மையான கூற்றவாளிகளைக் கண்டுபிடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலை நாட்டுமாறு தெரிவித்தார்.

1 கருத்துரைகள்:

அவர் பென்சேக்காவா ஆன்சேக்காவா?

Post a Comment