Header Ads



கொழும்பு துறைமுக நகரினால் பாரிய முதலீடுகளும், 86.000 வேலைவாய்ப்புக்களும் கிடைக்கும் - அரசாங்கம் தெரிவிப்பு


நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலம் ஊடாக, நாட்டிற்கு பாரியளவிலான முதலீடுகள் மாத்திரமே கிடைக்குமென அரசாங்கம் தெரிவிக்கின்றது.

தொலைகாணொளி ஊடாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னர் கூறப்பட்டவாறு, வெளிநாட்டு வருவாயை கடனாக இன்றி நாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று முதலீடுகளைக் கொண்டுவருவதற்காக மாத்திரமே இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

மாறாக நாட்டை பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சட்டமூலத்தின் ஊடாக 86,000 வேலைவாய்ப்புகள் கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.