Header Ads



இஸ்ரேல் மதநிகழ்வில் 44 பேர் பலி, 150 பேர் காயம், 40 பேர் ஆபத்தான நிலை


இஸ்ரேலில் மதநிகழ்வொன்றில் சனநெரிசல் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 44 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியில் வருடந்தோறும் இடம்பெறும்   Lag B'Omer மதநிகழ்விலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த மதநிகழ்வில் ஒரு சில நொடிகளில் இந்த விபத்து ஏற்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

படிகளில் ஏறிக்கொண்டிருந்த தடுமாறி கீழே விழத்தொடங்கியவுடன் இந்த விபத்து இடம்பெறத்தொடங்கியதுபின்னால்நின்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக விழுந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு சில நிமிடங்களில் இதுஇடம்பெற்றது, மக்கள் விழுந்தனர் ஒருவரை ஒருவர் மிதித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பின்னர் குறுகிய பாதை வழியாக மக்கள் தப்பிவெளியே முயல்வதை காண்பிக்கும்படங்கள்வெளியாகியுள்ளன.

மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்கள் வெளியானவேளை நான் குண்டுவெடிப்பு எச்சரிக்கை என நினைத்தேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸார் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதை குறித்து அறிவித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது இங்கு இடம்பெறும் என எவரும் எதிர்பார்க்கவில்லை கொண்டாட்டம்; துக்க நிகழ்வாக மாறிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

150 பேர் காயமமடைந்துள்ளனர் இவர்களில் 40 நிலைமை ஆபத்தானதாககாணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. இஸ்ரேல் இல்ஒருவர்தவிர ஏனைய எல்லாரும் அழித்து போனாலும் அநியாயம் அக்கிரமம் அழியாத நிலைமை தான் தொடர்ந்து இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.