Header Ads



ஒற்றை ஆம்புலன்சில் 22 சடலங்கள் - இந்தியாவில் நெஞ்சை நொறுக்கும் பயங்கரம்


கொரோனா பாதிப்பின் உக்கிரத்தை வெளிச்சம் போட்டு காட்டும் புகைப்படம் ஒன்று இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இறந்தவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் விரும்பினாலும் முடியாமல் போகும் நிலை.

அரசு மருத்துவமனை ஒன்றில் இறந்த 22 பேர்களின் சடலங்களை ஓரோ பிளாஸ்டிக் பைகளில் நிரப்பி, ஒரே ஒரு ஆம்புலன்சில் எரியூட்ட கொண்டு செல்லும் காட்சி, நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபலமான ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனாவால் இறந்த 22 பேர்களின் சடலங்களையே ஒரே ஒரு ஆம்புலன்சில் திணித்து எரியூட்ட கொண்டு சென்றுள்ளனர்.

இறந்தவர்களின் உறவினர்கள் பதிவு செய்த குறித்த புகைப்படமானது, உள்ளூர் ஊடகங்கள் வெளியிடவே, குறித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குற்றம் செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெளிவு படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் சேவை தேவைக்கு கிட்டாமல் போன நிலையிலேயே, ஒரே ஆம்புலன்சில் சடலங்களை கொண்டு சென்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

22 பேர்களில் 14 பேர் சனிக்கிழமையும் எஞ்சியவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இதனிடையே, சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த குடும்பத்தினரின் மொபைல் போன்களை பொலிசார் கைப்பற்றியதாகவும், சடங்குகள் முடிவடைந்த பின்னரே போன்களை திருப்பி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.