தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை - விஜய்
மக்களை மதரீதியாக பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. பாஜகவின் விஷமத்தனமான, பிளவுவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. தேர்தலில் பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை. திமுகவுடன், பாஜகவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கூடிக் குழைந்து கூட்டணிக்குப்போக நாங்கள் திமுகவோ, அதிமுகவோ இல்லை. தவெக எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும். தந்தை பெரியாரை அவமதித்தோ, அண்ணாவை அவதூறுக்கு உள்ளாக்கியோ எங்கள் மதிப்புமிக்க தலைவர்களை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்தால் அதில் பாஜக ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
- தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் விஜய் -
Post a Comment