Header Ads



200 வீதம் பொய் கூறப்படுகிறது - கெஹெலிய


அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைக்கு தீர்வாகவே கொழும்பு துறைமுக நகருக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க முயற்சித்து வருவதாக  ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் நீதிமன்றத்தை மீறி நாங்கள் செயற்படவில்லை. எந்த வகையிலும் இல்லை. கூறும் விடயங்கள் 200 வீதம் பொய்யானவை. துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமூலம் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையது என சட்டமா அதிபர் கூறியுள்ளதுடன் அதிகாரபூர்வமாக அரசாஙகத்திற்கும் அறிவித்துள்ளார்.

இதன் பின்னரே நாங்கள் அதனை முன்னெடுத்துச் சென்றோம். எமக்கு ஒரு பிரச்சினையுள்ளது. அதுதான் அந்நிய செலாவணி பிரச்சினை. டொலர் பிரச்சினை. இந்த பிரதான பிரச்சினையை தீர்க்கவே நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்கின்றோம்.

இதனை தடுத்து, மக்கள் மீது சுமையை ஏற்றி, மிகவும் மோசமான யுகத்தை ஏற்படுத்தவும் அதன் மூலம் திருப்தியடையும் சிலர் முயற்சிப்பதாகவே நான் காண்கின்றேன் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. your born is donnkey, shinkal lier terrorist dnt tallk

    ReplyDelete
  2. உலகில் இரண்டாம் மூன்றாம் மண்டல நாடுகள் மேற்கத்திய நாடுகளின் பாரிய முதலீட்டின் மூலம்தான் வளர்ச்சியடைந்து வருகிறது அதற்கு இலங்கை விதிவிலக்கு இல்லை பொதுவாக ஒருநாடு இன்னொடு நாட்டில் பாரிய முதலீடு செய்யும் போது எப்போம்தும் 99 வருட ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம் நமது தேவைக்கு ஏற்றாற்போல் 5 அல்லது 10 வருட ஒப்பந்தந்தில்எந்த நாடும் முதலீடு செய்ய முன் வராது,இருக்கும் அரசாசாங்கத்தின் கால எல்லைக்குள் முடிவடையும் வகையில் நடப்பது சாத்தியம் இல்லை.
    எதிர் கட்சிகள் ஒப்பந்த நிபந்தனைகளை பரிசீலனை செய்து சில மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டுமே தவிர எல்லாவற்றையும் நடக்க விடாமல் தடுத்தால் நாடு அபிவிருத்தி அடைய முடியாது இதனை பார்க்கும் ஏனைய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வராது.
    மத்திய கிழக்கு நாடுகளை எடுத்துக் கொண்டாலும் எண்ணெய் வழங்களை மேம்படுத்தி சுத்திகரிக்கும் ஒப்பந்தங்கள் மேற்கத்திய நாடுகளே செய்கிறது எந்த பிரச்சினைகளும் ஏற்படவில் நாடுகள் அபிவிருத்தியடைந்து மக்கள் நிம்மதியாக வழமிக்க வாழ்க்கை வாழ்கிறார்கள்,
    இலங்கையில் மட்டுமே அரசாங்கம் எடுக்கும் எந்த வேலை திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பு காட்டி கடைசியில் வரக்கூடிய முதலீட்டாளர்கள் திரும்பிச் செல்லும் நிலை உருவாகின்றது இதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை மாறாக நமக்கும் நாட்டுக்கும்தான் நஷ்டம்,

    முதலாவாது அரசாங்கத்திற்கு நாட்டை வழி நடத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும்,

    இலங்கையை பொறுத்த வரையில் ஆர்ப்பாட்டம் இல்லாத நாள் இல்லை இதற்கு பதில் சொல்வதிலேயே அரசாங்கத்தின் காலம் போகிறது, எல்லாவற்றையும் எதிர்த்தால் நாட்டின் நிலை என்ன?
    பொதுவாக நம் நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் வெளிநாட்டு முதலீடு மிகவும் முக்கியம் இல்லை என்றால் மேலும் நாடு பாரிய கஷ்டத்தில் மாட்டிக் கொள்ளும்,
    ஆகவே அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க எதிர் கட்சிகள் முன்வர வேண்டும்,
    JAWFER JP

    ReplyDelete
  3. ​பொய் மூட்டைகளில் முக்கியமான மூட்டை இது.

    ReplyDelete
  4. ​பொய் மூட்டைகளில் முக்கியமான மூட்டை இது.

    ReplyDelete
  5. அமரிக்கா ஜப்பான் இந்தியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மேற்குலகமும் போட்சிற்றியையும் போட்சிற்றிக்கு தனாட்ச்சி அதிகாரங்கள் வளங்கப் படுவதையும் தமக்கெதிரான யுத்தப் பிரகடனமாகவே பார்க்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு மாகாணசபையை கூட வளங மறுக்கும் சிங்கள அரசு சீனாவுக்கு நாட்டையே பத்திரம் எழுதித்தருகிறது. இது நாட்டில் சீனா உருவாக்கிய முதலாவது தன்னிச்சைபிரதேசம். தொடர்ந்து அமரிக்கா ஜப்பான் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளது முறை

    ReplyDelete
  6. அமரிக்கா ஜப்பான் இந்தியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மேற்குலகமும் போட்சிற்றியையும் போட்சிற்றிக்கு தனாட்ச்சி அதிகாரங்கள் வளங்கப் படுவதையும் தமக்கெதிரான யுத்தப் பிரகடனமாகவே பார்க்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு மாகாணசபையை கூட வளங மறுக்கும் சிங்கள அரசு சீனாவுக்கு நாட்டையே பத்திரம் எழுதித்தருகிறது. இது நாட்டில் சீனா உருவாக்கிய முதலாவது தன்னிச்சைபிரதேசம். தொடர்ந்து அமரிக்கா ஜப்பான் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளது முறை

    ReplyDelete

Powered by Blogger.