Header Ads



தமிழ் மக்கள் புலிகள் கட்சி ஆதரவுடன், பிரதேச சபை அதிகாரத்தை கைப்பற்றிய UNP


மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச சபையின் ஆளும் அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.

மண்முனைப்பற்று பிரதேச சபையில் தொடர்ச்சியாக தவிசாளருக்கு எதிரான பிரேரணைகள் வெற்றிபெற்றதை தொடர்ந்து தவிசாளர் உள்ளூராட்சிமன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் இழந்த காரணத்தினால் புதிய தவிசாளர் தெரிவு இன்று இடம்பெற்றது.

17 உறுப்பினர்களைக் கொண்ட மண்முனைப்பற்று பிரதேச சபையில் இன்றைய தினம் 16 உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இந்த அடிப்படையில் தவிசாளர் தெரிவு தொடர்பான அறிவிப்பினை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் விடுத்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உறுப்பினராகவுள்ள தயானந்தனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நகுலேஸின் பெயர் முன்மொழியப்பட்டது.

இந்தநிலையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றதோடு தயானந்தனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் நகுலேஸுக்கு ஆதரவாக 5 வாக்குகளும் வழங்கப்பட்டதாக HIRU செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.