March 13, 2021

அளவுக்கு மீறி மார்க்க விவாதம், அத்தகைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடுவதையும் நிறுத்துக


- Farsan -

அன்பார்ந்த எம்  உறவுகளுக்கு, 

இலங்கை அரசாங்கத்தினால், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்   வெளியிடப்பட்டிருக்கும் "புனர்வாழ்வு முகாம்கள்"  தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்.

இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில், மத அடிப்படைவாதம் என்று கருதும் விதமாக ஒருவர் கருத்து தெரிவித்தாலோ, எழுதினாலோ வேறுவகையில் மார்க்க கருத்துத்துக்களை கடுமையாக பரப்பினாலோ கைதுசெய்யப்பட்டு சீர்திருத்த முகாம்களுக்கு அனுப்ப முடியும்.

ஒருவர் மத அடிப்படைவாதம் பேசுவதாக ஒரு போலீஸ் அதிகாரியோ ராணுவத்தினரோ வேறு ஒரு உயர் அதிகாரியோ ஒரு நபரை குற்றம் சொல்லி நீதிமன்றத்தில் நிறுத்தும் பட்சத்தில் அந்த நபரை ஒரு வருடம் வரை சீர்திருத்த முகாம்களுக்கு அனுப்ப முடியும்.

இந்த வர்த்தமானி அறிவித்தலின்  படி அவ்வாறு சீர்திருத்த முகாம்களுக்கு அனுப்பப்படும் ஒருவர் அதற்க்கு எதிராக சட்டப்படி வாதாடும்  வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே  இருப்பது போலவே  தெரிகிறது .

ஆதலால் எமது உறவுகள் அல்லது  உங்களுக்கு  தெரிந்த ஒருவர் மார்க்கத்தின் மீதுள்ள பற்று காரணமாகவோ அல்லது  அறியாமையின் காரணமாக  அளவுக்கு மீறி மார்க்க விவாதங்களில் ஈடுபடுவது,   அத்தகைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடுவது தொடர்பில் எச்சரிக்கையாக நடந்துகொள்வதன்  மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

3 கருத்துரைகள்:

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு சரியான நேரத்தில் வழங்கப்படும் ஆலோசனை. முஸ்லிம்கள் இதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து இலங்கை ஜாமியதுல் உலமாவும் இந்த ஆலோசனையை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ். இந்த சட்டம் / ஒழுங்குமுறைகள் என்ன என்பது குறித்து எங்கள் சமூகத்தின் இடைக்காலத்தினர், கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களால் இந்த பாதிக்கப்படக்கூடிய முஸ்லீம் குடிமக்களைப் புதுப்பிக்க தகவல் மற்றும் கல்வி அமர்வுகள் நடத்தப்பட வேண்டும். சிவில் சமூகம் என்று அழைக்கப்படும் முஸ்லீம் மற்றும் உலேமா சபாய் இந்த சட்டக் குழுக்களுடன் ஒத்துழைக்க வேண்டும், "ஊடகங்களை" மகிழ்விப்பதற்காக அல்லது தாழ்மையானவர்களை ஏமாற்றுவதற்காக அறிக்கைகளை வெளியிடும் நமது சில அரசியல்வாதிகள் மற்றும் உலமாக்களைப் போல உரத்த குரலில் பேசுவதன் மூலம் செய்யக்கூடிய தவறுகளைத் தடுக்க வேண்டும். இந்த சவாலை ஏற்க பொருத்தமான முஸ்லீம் வல்லுநர்கள் / சட்ட வல்லுநர்கள் முன்வருவார்களா, இன்ஷா அல்லாஹ். பெரிய சத்தம் போடக்கூடாது என்று இஸ்லாம் பிரசங்கித்திருப்பதை
முஸ்லிம்கள் எப்போதும் புரிந்துகொள்வார்கள்.
அத்தியாயம் (31) sūrat luq'mān.
யூசுப் அலி விளக்குகிறார்: "மேலும், உங்கள் வேகத்தில் மிதமாக இருங்கள், உங்கள் குரலைக் குறைத்துக்கொள்ளுங்கள். சந்தேகத்திற்கு இடமின்றி ஒலிகளின் கடுமையானது கழுதையின் துணிச்சல்நமது அரசியல்வாதிகள் மற்றும் உலமாக்கள் சிலர் இப்படித்தான் பேசுகிறார்கள். இது எங்கள் சமூகத்திற்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது.
Noor Nizam - Convener "The Muslim Voice".

2014ல் இருந்தே எச்சரித்து வருகிறேன். வஹாபி பிரிவினர்மீது குறிவைக்கப்படுகிறது, வஹாபிகள் சூபிகளோடு பேசி ஜனநாயகரீதியான பொது கருத்துக்கு வரவேண்டும் என வலியுறுத்தியதற்க்கு மிக மோசமாக விமர்சிக்கப்பட்டேன். ஆனால் அதுதவிர வேறு மார்க்கமில்லை. சிங்கள பெளத்தர் மத்தியில் உச்சத்தில் இருந்த வஹாபி வெறுப்புணர்வு ஈஸ்ட்டர் தாக்குதலின்பின் சிங்கள கிறிஸ்த்துவர் மத்திலும் கிழக்கு தமிழர் மத்திலும் பரவிவருகிறது. உலக முஸ்லிம்நாடுகளில் ஏற்பட்டுவரும் சீர்திருத்தங்களை இலகுவில் புறம்தள்ளிவிட முடுயுமென தோன்றவில்லை. சூபிகளும் வஹாபிகளும் ஜனநாயக ரீதியில் முஸ்லிம் நாடுகளின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு ஒற்றுமைப் படுவதை தவிர வேறு மார்க்கம் தெரியவில்லை. மவுனமாக இருக்கலாம். இயலவில்லை. தூற்றுவோர் தூற்றுங்கள். அதுதானே விதி.

Post a comment