March 30, 2021

ஷைத்தான் சாப்பாத்தும், ஷைத்தானின் சதிகளும்

- ராஜி -

ஷைத்தான் சப்பாத்து (satan shoe ) என்பது இன்றைய பேசுபொருள். இது Nike கம்பனிக்கும் Brooklyn art collective MSCHF கம்பனிக்கும் இடையே உள்ள copyright தகறாறு ஒன்று சம்பந்தமான பிரதான செய்தி

இந்த சப்பாத்தில் உள்ள விசேடம் என்ன தெரியுமா..?

கிருஸ்தவ பைபிலில் உள்ள ஷைத்தான் பற்றி கூறப்பட்டுள்ள வசனம் கொண்ட "Luke 10:18" என்ற பகுதி உண்மையான மனித இரத்ததால்( 60 cubic centimetres (2.03 fluid ounces)  பொறிக்கப்பட்டுள்ளமை ஆகும். 

அதாவது,

"ஆகவே அவன் அவர்களுக்கு சொன்னான் 'வானத்தில் இருந்து மின்னல் போல ஷைத்தான் வீழ்வதை பார்த்தேன்'." என அந்த வசனம் கூறுகிறது.

உலகம் எங்கே போகிறது...?

ஷைத்தானிய ஆலயம்,ஷைத்தானிய இசை ஆல்பங்கள், ஷைத்தானிய அமைப்புகள், ஷைத்தானிய வழிபாட்டார்கள் என ஷைத்தான் தொடர்பான அமைப்புகளும் வழிபாடுகளும் பல்கிப் பெருகிப் போயுள்ளன.

நம்மை படைத்த இறைவனால் மனித குலத்தின் முதல் எதிரியாக அடையாளம் காட்டப்பட்டவன் இப்போது ஹீரோவாக ஆகி வருகிறானா..?

என்னதான் நடக்கிறது..?

இந்த செய்திகளை தினமும் வாசிக்கும் போது நம்மை படைத்த அல்லாஹ்வின் முன்னால் ஷைத்தான் செய்த சூளுரை கொண்ட அல்குர்ஆனில் உள்ள பின்வரும் வசனம் நினைவுக்கு வருகிறது,

وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ‏

“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.

(அல்குர்ஆன் : 4:119)

அந்த வசனம் சிறியதொரு வசனம் ஆனால் பாரிய விளக்கம் கொண்ட வசனம். ஷைத்தானின் வழி கெடுக்கும் உத்திகளை மூன்று பகுதிகளாக நோக்கலாம்

1.தவறான எண்ணங்களை உருவாக்குதல் -

ஷைத்தான் தவறான எண்ணங்களை மனிதர்களின் மனதில் போடுவான்.

இம்மையில் வெற்றி அடைவதற்கான தவறான, குறுக்கு பாதைகளை, அனுமதிக்கப்படாத வழிகளை காட்டுவான் , 'தொடர்ந்தும் பாவம் செய்வோம் வயசான நேரத்தில் மன்னிப்பு கேட்போம்' என்கிற தவறான எண்ணத்தை உள்ளத்தில் போடுவான் , நல்ல அமல்களை செய்வதை தள்ளி போடுமாறு, உலக ஆதாயங்களுக்காக விடுமாறு மனிதனின் காதுகளில் முனுமுனுப்பான். தன்னை வழிப்பட தனக்கு ஆலயம் கட்ட, இறைவனின் வசனங்களை நக்கல் நையாண்டி பண்ண மனிதர்களை ஊக்குவிப்பான்.

2.ஆடு மாடு காதுகளை அறுத்தல்- அரேபிய ஜாஹிலியா காலத்தில் சிலைகளுக்கு நேர்ச்சை இடப்படும் கால்நடைகளின் காதுகளை அறுத்து வந்தனர்.அவர்கள் அவ்வாறான கால்நடைகளில் சவாரி செய்ய மாட்டார்கள், அது யாரின் தோட்டத்துக்குள் நுழைந்து பயிர்களை உண்டாலும் அதனை அடிக்க மாட்டார்கள். அதனோடு அந்த மிருகத்தை அறுக்க மாட்டார்கள். மனிதனின் மனதில் அல்லாஹ் அல்லாதவற்றுக்காக கால்நடைகளின் காதுகளை அறுத்து கால்நடைகளை சித்திரவதை செய்து மனிதர்களை அல்லாஹ்வின் பாதையில் இருந்து தூரமாக்க ஷைத்தான் இதனை செய்யுமாறு மனதில் தூண்டுக்கிறான்.இதனை சம காலத்தில் பசு மாட்டை வணங்குதல், வேறு மிருகங்களை புனிதமாக கருதி வணக்க வழிபாடுகளில் ஈடுபாத்தல் போன்றவற்றில் காணுகிறோம்

3.அல்லாஹ்வின் படைப்புகளின் கோலங்களை மாற்றும்படியும் ஏவுதல்-

இதனை சம காலத்தில் நம் கண் முன்னே காணுகிறோம்.

ஒவ்வொருவரையும் அல்லாஹ் அழகிய உருவத்தில் படைத்துள்ளான். அப்படி இருக்க, தனது இந்த சவாலை நிறைவேற்ற ஷைத்தான் செய்யும் உத்தி மனிதனின் காதுக்குள் சென்று அவனின் நிறம் குறித்தோ அல்லது உயரம் குறித்தோ அவனது உறுப்புகளின் அளவுகள் குறித்தோ திருப்தி அற்ற தன்மையை (insecure)உருவாக்குக்கிறான். இதன் காரணமாக ஆண், பெண்ணாக செயற்கையாக மாறுவதும் பெண், ஆணாக மாறுவதும், மனித உறுப்புகளை மாற்ற cosmetic surgery கள் செய்வதும், கண்களில் இமை முடிக்கள் செதுக்கப்படுவதும், பிள்ளைகள் பெறுவதை தடை செய்ய கருப்பப்பை அகற்றப்படுவதும் நம் முன்னே காணுகிறோம். அத்துடன் நேராக உள்ள தலை முடியை சுருட்டுவது, சுருட்டலாக உள்ள முடியை நேராக்குவது, அல்லாஹ் அழகிய விதத்தில் தந்துள்ள தலை முடிகளின் நிறத்தை மாற்றுவது, இயற்கைக்கு மாற்றமான தன்னின சேர்க்கைகளில் ஈடுபடுவது, நமக்கு அழகிய நிறங்களில் தரப்பட்டுள்ள கண்களின் நிறத்தை contact lense மூலமாக மாற்றுதல், அனுமதிக்கப்படாத மனித உறுப்புகளில் ஓட்டை இட்டு(piercing) ஆபரணம் அணிதல்,

தமது இயற்கையான நிறத்த்ததில் திருப்தி காணாது அவற்றை மாற்ற முயற்சிகள் எடுப்பது என நீண்டு கொண்டே போகும் அந்த பட்டியல். எனவே ஷைத்தான் நமது முதல் விரோதி. அவனைப்பற்றி நமது இறைவன் அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் எச்சரித்துள்ளான். அவனது சதியில் நாம் விழுந்து விடக்கூடாது. நமது மரணம் வரை அவனது போராட்டம் தொடரும்.அவன் நம்மை நிறப்பி நரகத்தை நிரப்ப திடசங்கட்பம் பூண்டுள்ளான்.

அல்லாஹ்வின் முன்னால் அவன் செய்த சவால்களை நிறைவேற்ற காரணமாக ஆகும் ஒருவராக நாமும் ஆகி விடக்கூடாது.

ஷைத்தானின் சதிக்களான மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாவமான செயல்களில் இருந்துஅல்லாஹ் நம்மையும் நமது குடும்பத்தையும், பரம்பரையையும் நமது சமூகத்தையும் பாதுகாப்பானாக.. ஆமீன்..

0 கருத்துரைகள்:

Post a comment