Header Ads



ஜனாஸா எரிப்பு நிறுத்தம் - இலங்கைக்கு ​​உலக முஸ்லிம் லீக்கும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் பாராட்டு


கோவிட் - 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் முடிவை மாற்றிய இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டுவதாக உலக முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான தொலைபேசி உரையாடலின் போது, ​​உலக முஸ்லிம் லீக் இன் பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது அல்-இசா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை இலங்கை அரசாங்கத்துக்கும் உலக முஸ்லிம் லீக்கிற்கும் இடையிலான நெருங்கிய உறவை வலுப்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) பொதுச் செயலகமும் இலங்கை அரசாங்கத்தின் முடிவை வரவேற்றது.

தொற்றுநோய்களின் போது பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களை தகனம் செய்வதைத் தவிர்க்கவும், இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அடக்கம் செய்யவும் இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது.

இதேவேளை, கோவிட் - 19 தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை கட்டாய தகனம் செய்யும் முடிவில் இலங்கை அரசாங்கம் கடந்த வாரம் மாற்றம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Actually we have got the lost right. Nothing is new here. It is to get the support of muslim countries at Geneva convention. We have to think why the burial right is given now. Why the burial was not allowed with the release of virologies report?

    ReplyDelete
  2. It is almost ONE year since the Muslim Community in this country was undergoing TORTURE by the Forced Cremation of Covid 19 victims.

    Did your Organisations take any action to End this TORTURE by the Govt. of Sri Lanka (SL)? If Only you took this matter Firmly and Strongly with the SL Govt. as soon as the Govt. introduced this Law of Forced Cremation, you would have prevented Not Only the Suffering of the Muslims living in this country but also more than 350 Innocent Janazas being Mercilessly Cremated.

    It is Really Very Disappointing and a matter for Regret that you should Rush to Congratulate the SL Govt. for stopping its Brutal Action WITHOUT saying a word All these Months when the Govt. of a weak, tiny country like Sri Lanka almost Derisively Challenged the entire Muslim World by its Cruel action against the Muslims and Also Islamic Brotherhood.

    ReplyDelete

Powered by Blogger.